மாட்டு சாணத்தில் இயங்கும் காரை தயாரிக்கும் மாருதி... பத்து மாடு இருந்தா போதும் ஒரு நாளையே சமாளிச்சுடலாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் மின்சார கார் உற்பத்தியைத் தொடர்ந்து மாட்டு சாணத்தினால் தயாரிக்கப்படும் பயோ வாயுவினால் இயங்கக் கூடிய வாகனங்களையும் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பிளான் பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 6 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஆறில் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் 2025 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிற எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்தடுத்து என 2030 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

மாட்டு சாணம்

மாட்டு சாணமே போதும்

இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் பயோ கேஸில் இயங்கும் காரையும் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஒட்டுமொத்த மாருதி சுஸுகி கார் பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு இந்த தகவல் உச்சகட்ச மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் பயோ கேஸால் இயங்கும் வாகனம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், நாட்டில் மாட்டு சாணத்திற்கான தேவை அதிகரிக்கும்.

பெட்ரோல், டீசலைவிட குறைவான விலை

ஆகையால், மாடுகளின் சாணத்தினாலும் விவசாயிகளால் கணிசமான அளவு வருவாயை ஈட்டிக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படுவதால் அதன் விலையும் மலிவாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், பெட்ரோல், டீசலுக்கு செலவிடுவதை போல பெரும் தொகையை இதற்கு செலவு செய்ய வேண்டி இருக்காது என யூகிக்கப்படுகின்றது. இத்தகைய வாகனங்களின் உற்பத்தியையே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது இந்தியாவிற்காக கையில் எடுத்து இருக்கின்றது.

மாட்டு சாணம்

கார்பன் வெளியேற்றம் குறைவு

அதிகப்படியான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியாகவே நிறுவனம் மாட்டு சாணத்தில் இயங்கும் வாகனங்களின் உருவாக்க பணிகளைக் கையில் எடுத்து உள்ளது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் பனாஸ் டெய்ரி போன்ற அமைப்புகள் உடன் இதற்காக மாருதி சுஸுகி இணைய இருக்கின்றது. இத்துடன், மாட்டு சாணத்தில் இருந்து பயோ கேஸை தயாரித்து, இதன் வாயிலாக மின்சாரத்தை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஃபுஜிசன் அஸகிரியிலும் தனது முதலீட்டை செய்து இருக்கின்றது.

பத்து மாடு இருந்தா ஒரு நாளை சமாளிச்சுடலாம்

மாருதி சுஸுகி தயாரிக்கும் இந்த புதிய வாகனம் ஒரு நாள் முழுக்க இயங்க பத்து மாடுகளிடம் இருந்து பெறப்படும் மாட்டு சாணமே போதும் என கூறப்படுகின்றது. நாட்டில் கோடிக் கணக்கில் மாடுகள் உள்ளன. ஆகையால், மாருதி சுஸுகியின் இந்த திட்டம் பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாடுகள் வளர்ப்பையும் இந்த திட்டம் ஊக்குவிக்கும். சோதனை ஓட்டமாகவே நிறுவனம் மாட்டு சாணத்தில் இயங்கும் காரின் உருவாக்கப் பணிகளை கையில் எடுத்து இருக்கின்றது.

மாட்டு சாணம்

பயோ கேஸ் தயாரிப்பு

2024 ஆம் ஆண்டின் மையப்பகுதியில் நிறுவனம் மாட்டு சாணத்தில் இயங்கும் காரின் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. குஜராத்தின் பனஸ்கந்தாவிலேயே மாட்டுச் சாணத்தில் இருந்து பயோ கேஸை உருவாக்கும் ஆலையை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் நாள் ஒன்றிற்கு 1,500 கிலோ வரையில் பயோ கேஸை தயாரிக்க முடியும். 500 சிஎன்ஜி கார்களுக்கு சப்ளை செய்வதற்கான அளவே இதுவாகும்.

வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டம்

மாருதி சுஸுகியின் இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பிற வாயுக்களான சிஎன்ஜி மற்றும் எத்தனால் ஆகியவற்றைக் காட்டிலும் மாட்டு சாணத்தில் இருந்து பெறப்படும் பயோ கேஸ் நிலைத் தன்மைக் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. தற்போது சிஎன்ஜியின் இருப்பு பாரிய அளவில் இருக்கலாம். ஆனால், வெகு நாட்களுக்கு நீடிக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அவை விரைவில் தீர்ந்துப்போகக் கூடும்.

தட்டுப்பாடே வராது

இந்த மாதிரியான சூழலில் மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் பயோ எரிவாயு என்பது மாடுகள் இந்த உலகில் இருக்கும் வரைக்குமே இருக்கும். ஆகையால், இதில் பற்றக்குறையும் ஏற்பட வாய்ப்பில்லை என கருதப்படுகின்றது. இதேபோல், பிற எரிவாயுக்களில் இருந்து வெளிவரும் கார்பன்னைக் காட்டிலும் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்படும் பயோ கேஸில் இருந்து குறைவாகவே கார்பன் வெளியாகும் என கூறப்படுகின்றது. ஆகையால், சுற்றுச் சூழலுக்கும் பெரிய அளவில் கேடு விளைவிக்காததாக இது இருக்கும் என கருதப்படுகின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki planning to make cow dung biogas powered cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X