முக்கியமான அம்சத்தை சத்தமே இல்லாம தூக்கிய மாருதி சுஸுகி... இது நிறையபேத்துக்கு தேவைப்பட கூடிய அம்சமாச்சே..

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபல கார் மாடலில் வழங்கப்பட்டு வந்த முக்கிய அம்சத்தை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அகற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன அம்சம்? அந்த அம்சத்தை அகற்றியதற்காக ஏதேனும் காரணம் வெளியிடப்பட்டு இருக்கின்றதா? இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தன்னுடைய பிரபல கார் மாடல் ஒன்றில் வழங்கி வந்த சூப்பரான அம்சத்தை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அகற்றி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் இந்தச் செயலால் இனி அந்த அம்சம் பயன்பாட்டிற்குக் கிடைக்காது என்கிற நிலை உருவாகி இருக்கின்றது.

Maruti wagonr rear

வேகன்ஆர் மாடலில் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு வந்த டிஃபாக்கர் வைப்பரையே நிறுவனம் அகற்றி இருக்கின்றது. நிறுவனத்தின் டாப் செல்லிங் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலும் இதுவே ஆகும். இந்தக் கார் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளிலும் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பெட்ரோல் தேர்வைப் போலவே சிஎன்ஜி தேர்விற்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலிலேயே டிஃபாக்கர் அம்சத்தை மாருதி சுஸுகி நீக்கி இருக்கின்றது. டாப் ஸ்பெக் தேர்வில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, இசட்எக்ஸ்ஐ பிளஸ் தேர்விலேயே டிஃபாக்கர் வழங்கப்பட்டு வந்தது.

இனி இந்த தேர்விலும் டிஃபாக்கர் இடம் பெறாது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் இந்த வேரியண்ட் விற்பனைக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நீண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட மாருதி சுஸுகி காராக வேகன்ஆர் இருக்கின்றது.

இந்த காரை நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் இருந்தே விற்பனைச் செய்து வருகின்றது. அப்போதில் இருந்து இப்போது வரை வேகன்ஆர்க்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக வேகன்ஆர் மாறி இருக்கின்றது.

இதன் விளைவாக சமீபத்தில் இந்த கார் 30 லட்சம் யூனிட்டுகள் விற்பனை என்கிற சாதனையை எட்டியது. இந்தியாவில் வேறு எந்த காரும் இந்த அளவு மிகப் பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்குமா என்பது சந்தேகமே. குறிப்பாக, இந்த காரை ஏற்கனவே வாங்கியவர்களே மீண்டும் மீண்டும் வந்து வாங்கிக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இத்தகைய அமோக விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலே வேகன்ஆர் ஆகும். இந்த ஹேட்ச்பேக் கார் தற்போது ரூ. 5.54 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் சிஎன்ஜி தேர்வு ரூ. 6.44 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக காட்சியளிக்கும் வேகன்ஆர் கார் மாடலில் டிஃபாக்கர் அம்சம் நீக்கப்பட்டு இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த அம்சம் ஒரு சிலருக்கு வேண்டும் என்றால் அது வேண்டாததாக இருக்கலாம். ஆனால், சிறுவர்களைக் கொண்டிருப்போர்களுக்கு இந்த அம்சம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. அவர்கள் தெளிவாக பின் பக்கத்தை வேடிக்கைப் பார்த்த வண்ணம் பயணிக்க ரியர் டிஃபாக்கர் உதவியாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 21, 2023, 16:30 [IST]
English summary
Maruti suzuki removed wagonr rear defogger feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+