டிரெண்டையே மாத்தும் மாருதி! இனி மாருதில சின்ன கார் தான் நல்லா சேல்ஸ் ஆகுனும்னு நினைக்காதீங்க!
மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் சில செக்மெண்டில் வளர்ச்சியையும் சில செக்மெண்ட்களில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது . இந்நிறுவனம் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 1,81,343 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை விபரம் குறித்த விரிவான தகவல்களை தெளிவாக காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. முக்கியமாக குறைவான விலையில் இந்நிறுவனம் கார்களை விற்பனை செய்வதால் மக்கள் பலர் இந்நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

மற்ற நிறுவனங்களில் விற்பனையை காட்டிலும் மிக அதிகமான எண்ணிக்கையிலானா கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை விபரம் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி மாருதி நிறுவனம் சில செக்மெண்ட்களில் வளர்ச்சியையும் சில செக்மெண்ட்களில் விற்பனையில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.
மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையை சேர்த்து மொத்தமாக 1,81,343 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் விற்பனையான 1,76,306 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது அதைவிட இது அதிகமாக இருக்கிறது. அதே நேரம் கடந்த ஆகஸ்டில் இந்நிறுவனம் 1,56,114 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் 10 லட்சம் கார் விற்பனையை கடந்துள்ளது.

இந்த நிதியாண்டான அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை மாருதி நிறுவனம் மற்றும் 10,50,085 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே ஆறு மாதத்தில் 9,85,326 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதில் மாருதி நிறுவனம் மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்டில் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
மாருதி நிறுவனம் மினி செக்மெண்டில் தற்போது ஆல்டோ மற்றும் எஸ் பிரஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் இந்நிறுவனம் மொத்தமே 10,351 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் மொத்தம் 29,574 கார்களை விற்பனை செய்திருந்தது.

இதுவே நிதியாண்டின் படி கணக்கிட்டால் இந்த நிதியாண்டு வெறும் 72,500 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டு இதே முதல் ஆறு மாதத்தில் 1,21,056 கார்கள் விற்பனையாகி இருந்தது. இது மிகப்பெரிய சரிவாக இருக்கிறது. மாருதியில் சிறிய ரக கார்கள் தான் அதிகம் விற்பனையாகும் என பேசப்பட்டு வந்த நிலையில் அந்த டிரெண்ட் தற்போது மாறுகிறது.
அடுத்ததாக காம்பேக்ட் செக்மெண்டை பொறுத்தவரை இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 68,552 கார்களை விற்பனை செய்துள்ளது இந்த செக்மெண்டில் பலேனோ, செலிரியோ, டிசையர், வேகன் ஆர் ஆகிய கார்கள் இருக்கிறது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 72,706 கார்கள் விற்பனையாகியுள்ளது. நிதியாண்டை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் 4,33,428 கார்கள் விற்பனை ஆகி இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் 4,18,930 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்த செக்மெண்டும் கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது.
அடுத்ததாக மிட்-சைஸ் செக்மென்ட் இருக்கிறது. இந்த செக்மெண்டில் மாருதி நிறுவனத்திடம் சியாஸ் என்ற ஒரே ஒரு கார் தான் இருக்கிறது. இதை பொறுத்தவரை இந்த செப்டம்பர் மாதம் 1491 கார்கள் விற்பனையாகியுள்ளது கடந்தாண்டு தே செப்டம்பர் மாதம் 1359 கார்கள் விற்பனையாக இருந்தது. இந்த செக்மெண்டில் ஓரளவு வளர்ச்சியை மாருதி நிறுவனம் சந்தித்துள்ளது.
அடுத்ததான யூட்டிலிட்டி வாகன செக்மெண்டை பொருத்தவரை மாருதி நிறுவனத்திடம் பிரஸ்ஸா , எர்டிகா, ஃப்ராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, எஸ் கிராஸ், எக்ஸ்எல் 6 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இந்த செக்மெண்டில் 59,271 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இதுவே கடந்த ஆண்டு வெறும் 32,574 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதுவே நிதியாண்டு கணக்கை எடுத்துக் கொண்டால் இந்த நிதியாண்டில் 3,64,607 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் வெறும் 1,63, 630 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. இந்த செக்மெண்ட் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது என்ற கூறலாம்.
அடுத்ததாக வேன் செக்மெண்டை பொருத்தவரை மாதிரி நிறுவனத்திலும் ஈகோ என்ற ஒரே ஒரு வேன் மட்டுமே இருக்கிறது. அதன் விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் 1147 ஆக இருந்து இருந்தது. இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1297 ஆக இருக்கிறது.
மாருதி செக்மெண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகனத்தின் விற்பனையை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 1,50,812 ஆக உள்ளது இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1,48,350 ஆக உள்ளது. ஒட்டு மொத்த விற்பனையில் ஓரளவு வளர்ச்சியை தான் மாருதி நிறுவனம் சந்தித்துள்ளது.
கமர்சியல் செக்மெண்டில் இந்நிறுவனம் சூப்பர் கேரி என்ற ஒரே ஒரு வாகனத்தை மட்டும் தான் வைத்திருக்கிறது. இதன் விற்பனையை பொருத்தவரை இந்த செப்டம்பர் மாதம் 2,294 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2,550 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.
இந்த நிதியாண்டின் விற்பனையை பொறுத்த வரை 15,496 வாகனங்கள் விற்பனையாக இருந்தது இதுவே கடந்தாண்டு கடந்த நிதியாண்டு விற்பனையை பொறுத்த வரை 19,509 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இந்த கமர்சியல் வாகனத்தின் விற்பனை ஓரளவு சரிவை தான் சந்தித்துள்ளது. கமர்ஷியல் செக்மெண்டில் மாருதியால் நீண்ட ஆண்டுகளாக ஜொலிக்க முடியாமல் உள்ளது.
இதுபோக மற்ற நிறுவனங்களுக்காக மாருதி நிறுவனம் தயாரித்து கொடுத்த வாகனங்களை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 5526 வாகனங்களை மற்ற நிறுவனங்களுக்காக மாருதி நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு வெறும் 4208 வாகனங்களை மட்டும் தான் தயாரித்துக் கொடுத்திருந்தது.
ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 22,511 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21,403 வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. விற்பனை ஏற்றுமதியில் ஓரளவு வளர்ச்சியை தான் இந்த மாதம் சந்தித்துள்ளது. தொடர்ந்து மாருதிநிறுவனம் சில செக்மெண்ட்களில் வீழ்ச்சியை சந்தித்தாலும் ஒட்டு மொத்தமாக வளர்ச்சியை தான் சந்தித்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த செப்டம்பர் மாத டிரெண்ட்டை பார்க்கும்போது யூட்டிலிட்டி கார்களின் மீது தான் அதிகமான மோகம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மெல்ல மெல்ல சிறிய ரக கார்களின் விற்பனை குறைந்து யூட்டிலிட்டி கார்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதனால் மாருதியின் முகம் மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications









