இந்தியால எங்கு தேடினாலும் இப்படியொரு மாருதி காரை பார்க்க முடியாது!! எல்லா பெருமையும் கார் ஓனருக்கு தான்!

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) கார் ஒன்றில், இந்தியாவிலேயே முதல்முறையாக லம்போர்கினி நிறுவனத்தின் சிஸர் (கத்திரிக்கோல்) கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு சமயத்தில் சிஸர் டோர் கார்கள் என்றாலே அவை வித்தியாசமாக பார்க்கப்பட்டன. நம் தமிழ் சினிமாவில் கூட, 2000ஆம் காலக்கட்டத்தில் வெளியான திரைப்படங்களில் விலையுயர்ந்த கார் என சுட்டிக் காட்டுவதற்காக சிஸர் கதவுகளை கொண்ட கார்களை காட்டுவதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில், அப்போது விலையுயர்ந்த கார்களில் மட்டுமே இத்தகைய கதவுகள் வழங்கப்பட்டன.

s-presso fitted with scissor doors

ஆனால் இன்றோ, விருப்பப்படுவோர் தங்களது கார்களில் வழக்கமான கதவுகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக சிஸர் கதவுகளை பொருத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் ஒன்றில் லம்போர்கினி கார்களில் பொருத்தப்படும் சிஸர் கதவுகள் வெல்டிங் மூலம் பொருத்தப்பட்டு உள்ளன.

லம்போர்கினி கார்களில் சிஸர் கதவுகள் மிகவும் அழகாகவும், எடுப்பாகவும் இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு, லம்போர்கினி கார் நன்கு நீளமானவைகளாக இருக்கும். ஆனால், மாருதி எஸ்-பிரெஸ்ஸோ ஆனது அளவில் சிறிய மைக்ரோ ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். வாழ்க்கையில் ஒரு காரையாவது எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என கனவோடு இருப்பவர்களுக்காக மாருதி சுஸுகி அறிமுகம் செய்த கார் எஸ்-பிரெஸ்ஸோ.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எஸ்-பிரெஸ்ஸோவின் வெற்றிக்கும் இதுதான் காரணம். ஆனால், இத்தகைய அளவில் சிறியதான காரில் சிஸர் கதவுகளை பொருத்த வேண்டும் என நிறைய பேருக்கு தோன்றாது. அதனை இங்கு ஒருவர் நிஜமாக்கி உள்ளார். இந்த மாடிஃபை எஸ்-பிரெஸ்ஸோ கார் குறித்த படங்கள் ரிச்டார்க் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த படங்களில், கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரில் மேல்நோக்கி திறக்கும் சிஸர் கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம். இந்த கதவுகளை பொருத்துவதற்கு ஏற்ப காரை மாடிஃபை செய்தது மட்டுமின்றி, கதவு செயல்படும் விதத்தையும் கார் ஓனரின் விருப்பத்திற்கு இணங்க மாடிஃபை செய்து உள்ளனர்.

கார்களில் இவ்வாறு ஸ்டைலான கதவுகளை பொருத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த மெக்கானிக் ஷாப்கள் ஏகப்பட்டவை உள்ளன. சிஸர் கதவுகள் மட்டுமின்றி, இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரில் வழக்கமான சக்கரங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 5-ஸ்போக் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கார் முழுவதும் ஏகப்பட்ட பாடி ஸ்டிக்கர்களும் உள்ளதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில் காணலாம். இதனால் கார் பார்ப்பதற்கு ரேஸ் கார் போன்று தோற்றமளிக்கிறது. இதற்கேற்ப, காருக்கு உள்ளேயும் ஸ்போர்டியான சிவப்பு நிறத்தில் கேபின் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மற்றப்படி காரின் என்ஜின் & கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, லம்போர்கினி கார்களுக்கு உண்டான சிஸர் கதவுகள் பொருத்தப்பட்ட கார்களை இதற்குமுன் சில முறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதிலிலும் இல்லாத புதுமையாக, அளவில்-சிறிய மைக்ரோ காரான எஸ்-பிரெஸ்ஸோவில் சிஸர் கதவுகள் பொருத்தப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது.

Image Courtesy: RICH TORQUE/Instagram

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 23:42 [IST]
English summary
Maruti suzuki s presso fitted with scissor doors here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+