சோப்பு டப்பான்னு கிண்டலும் பண்ணுறாங்க! லட்ச கணக்குல பணம் கொடுத்து மாருதி காரை தான் வாங்குறாங்க! எப்படி இது?
மாருதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 49,016 பயணிகள் யூவி வாகனத்தை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்ட விற்பனையை ஒப்பிடும்போது 50.5 சதவீதம் அளவிற்கு பயணிகள் யூவி வாகன செக்மெண்டில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிசம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை விபரங்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றன. அதன்படி மாருதி நிறுவனமும் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மாருதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் கணிசமான அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக எஸ்யூவி செக்மெண்டில் சுமார் 50.5% அளவிற்கான வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மாருதி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,64, 439 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே விற்பனையை கடந்தாண்டு இதே காலகட்டத்தில் உடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 1,59,044 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த ஆண்டு 3.4 சதவீதம் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த விற்பனையில் 1,36,667 வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் விற்பனையாகி உள்ளன. 22,950 வாகனங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன. 4822 வாகனங்கள் டொயோட்டா நிறுவனத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆக இந்நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 1.6 சதவீத வளர்ச்சியையும் ஏற்றுமதியில் 16 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

இதில் பயணிகள் வாகன செக்மென்டை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் 1,34,358 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 1,34,395 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தன. இது 1.33% வளர்ச்சியாகும். காம்பேக்ட் கார்களான பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், டூர் எஸ், மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்களின் விற்பனை மட்டும் 64,679 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 7284 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இந்த செக்மெண்டில் 11.2% விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த விற்பனை வீழ்ச்சிக்கு எஸ்யூவி கார்களின் விற்பனை வளர்ச்சி மிக முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. இந்த செக்மெண்டில் கார் வாங்கும் மக்கள் பலர் எஸ்யூவி கார்களை விரும்பத் துவங்கி விட்டனர் என்பதால் இந்த செக்மெண்ட் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலகுரக கமர்ஷியல் வாகனத்தை பொறுத்தவரை மாருதி நிறுவனம் 2509 சூப்பர் கேரி வாகனத்தை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,660 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. தற்போது அதைவிட சற்று குறைவாகவே வாகன விற்பனை ஆகி உள்ளது. மாருதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மிகப்பெரிய வளர்ச்சியாக யூவி செக்மெண்டில் தான் சந்தித்துள்ளது.
மாருதி நிறுவனம் தற்போது யூவி செக்மெண்டில் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, ஆகிய கார்களை விற்பனை செய்து வருகின்றன. நவம்பர் மாதம் இந்த யுவி செக்மெண்டில் மட்டும் மொத்தம் 49,016 யுவி கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த செக்மெண்டில் வெறும் 32,563 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது 50.5% அளவிற்கு விற்பனை வளர்ச்சியை இந்த செக்மென்ட் பெற்றுள்ளது.

இந்த விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜிம்னி என்ற லைப் ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யூவி காரும், ஃபிராங்க்ஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரும் விற்பனைக்கு வந்தது மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் மாருதி நிறுவனத்தின் எஸ்யூவி போர்ட்ஃபோலியோ மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காரை ரீபேட்ஜ் செய்து மாருதி இன்விடோ என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதுபோக காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் பிரெஸ்ஸா என்ற காரையும் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் கிராண்டு விட்டாரா என்ற காரையும் விற்பனை செய்து வருகிறது. இந்த இது கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக மாருதி தான் இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு வரை எஸ்யூவி செக்மெண்டில் பெரிய அளவில் நல்ல பெயர் இல்லை. விற்பனை அதிகமாக இல்லை என்ற பெயரில் இருந்தது. தற்போது எஸ்யூவி கார்களில் கிங் என பெயர் எடுக்கும் அளவிற்கு மாருதி நிறுவனம் வளர்ந்து விட்டது.


Click it and Unblock the Notifications









