மாருதி கார்கள் விற்பனையை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது போலயே... ஏப்ரலில் இலட்சக்கணக்கில் விற்பனை!!

இந்தியாவின் நம்பர்.01 கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவை கடந்த 2022 ஏப்ரல் மாதத்துடன் எந்த அளவிற்கு அதிகம்/ குறைவு என்பது பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய 2023-24 நிதியாண்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கியுள்ளது. புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் மொத்தம் 1,60,529 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டிலும், வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்துள்ளது. இந்த 1,60,529 விற்பனை எண்ணிக்கையில் கமர்ஷியல் வாகனங்கள் உள்பட பயணிகள் வாகனங்களும் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி, டொயோட்டா உள்பட மற்ற கார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களும் அடங்குகின்றன.

maruti suzuki sales report 2023 april

அதுவே, கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் 1,50,661 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், மாருதி சுஸுகி வாகனங்களின் விற்பனை ஆனது 6.54% அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 5.61% குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் 1,70,071 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை என்று மட்டும் தனியாக எடுத்து பார்த்தோமேயானால், 1,37,320 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 1,21,995 பயணிகள் வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இதன்படி, மாருதி சுஸுகியின் உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆனது 12.56% உயர்ந்துள்ளது.

maruti suzuki sales report 2023 april

கடந்த மார்ச் மாதத்திலும் கிட்டத்தட்ட 1,32,763 கார்கள் மாருதி சுஸுகியால் இந்திய சந்தையில் விற்கப்பட்டு இருந்தன. இது 2023 மார்ச்சை விட 3.43% அதிகம் ஆகும். இந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்வதற்கு முக்கிய காரணம், பலத்தரப்பட்ட மக்கள் வாங்கக்கூடிய விலையில் சிறிய அளவிலான கார்கள் அதிகளவில் இந்த பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுவதாகும்.

மாருதி சுஸுகியின் கடந்த ஏப்ரல் மாத மொத்த உள்நாட்டு கார்கள் விற்பனையில் காம்பெக்ட் கார்களின் விற்பனை மட்டும் 54% ஆகும். மாருதி சுஸுகியின் காம்பெக்ட் கார்களாக செலேரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்ஆர், டிசைர் மற்றும் பலேனோ உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. டாக்ஸி பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் டூர் எஸ் செடான் கார் கூட இதில் அடங்குகிறது. இவற்றிற்கு அடுத்து யுடிலிட்டி கார்கள் மாருதி சுஸுகியின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளாக விளங்குகின்றன.

maruti suzuki sales report 2023 april

கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் 27% விற்பனையை பெற்று தந்துள்ள இந்த யுடிலிட்டி கார்களில் பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், கிராண்ட் விட்டாரா போன்ற எஸ்யூவிகளும், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 போன்ற எம்பிவிகளும் அடங்குகின்றன. ஃப்ரான்க்ஸ் காரின் டெலிவிரிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டுள்ளன என்பதால், இந்த மே மாதத்தில் இருந்து இந்த பிரிவில் ஃப்ரான்க்ஸ் காரும் உட்படும். மிகவும் விலை குறைவான ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் 10 சதவீத விற்பனையை பெற்று தந்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த வரிசையில் மாருதி சுஸுகியின் பெரும்பாலான வாகனங்களை நாம் பார்க்கவில்லை. குறிப்பாக, கமர்ஷியல் வாகனங்களை. அவற்றை எல்லாம் பார்த்தோமேயானால், மாருதி சுஸுகி எந்த அளவிற்கு மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் என மலைத்து போவீர்கள். கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னியின் டெலிவிரிகளால் புதிய உச்சத்தை வரும் மாதங்களில் தொடவுள்ளன.

Article Published On: Tuesday, May 2, 2023, 10:59 [IST]
English summary
Maruti suzuki sales report 2023 april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X