Fronx Launch இவ்வளவு கம்மி விலைக்கு வந்துச்சுன்னா ரோடு ஃபுல்லா இனி இந்த கார் தான் ஓடும் போலயே!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனத்திடமிருந்து ஒரு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. ஒரு வழியாகத் தனது புதிய எஸ்யூவிகாரை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டது.

அட அதாங்க கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் தனது ஃப்ரான்க்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது முதல் இந்த காருக்கான புக்கிங்கும் துவங்கியது. தற்போது நெக்ஸான என்ற மாருதியின் பிரிமியம் பிராண்ட் ஷோரூம் வழியாக இந்த கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

Fronx Launch Next Week

இந்த ஃப்ரான்க்ஸ் கார் மாருதி நிறுவனத்தின் 3வது எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மின்சைஸ் எஸ்யூவியான கிராண்ட் விட்டாரா, மற்றும் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான பிரெஸ்ஸா ஆகியவற்றிற்கு இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஃப்ரான்க்ஸ் கார் இந்தியாவிலேயே ஒரு தனித்துவமான கார். ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அம்சங்களை எடுத்து அதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட எஸ்யூவி கார் இது.

மாருதி நிறுவனம் ஏற்கனவே கிராண்ட் விட்டாரா காரை அறிமுகப்படுத்திய போது அந்த காருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் விலை சற்று அதிகமான கார் என்பதால் விலை குறைவான காரை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த ஃப்ரான்க்ஸ் காரின் வருகைக்காகத் தான் காத்திருக்கின்றனர்.

Fronx Launch Next Week

இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டு புக்கிங் துவங்கப்பட்டுள்ளதே தவிர இந்த காரின் விலை குறைத்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த காருக்கான புக்கிங் குவிந்துவிட்டது. இந்த காருக்கான விலை குறித்து விசாரித்த போது ரூ6.75 லட்சம் முதல் ரூ11 லட்சம் வரையில் இதன் விலை இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான விலை இன்னும் வெளியாகவில்லை.

இந்த காரின் விலை விபரங்களை அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. கிட்டத்தட்ட இதே விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானால் நிச்சியம் ரோட்டில் இந்த காரை அதிகம் காண வாய்ப்புகள் இருக்கிறது. மக்கள் போட்டிப் போட்டு இந்த காரை வாங்கி குவிப்பார்கள்.

Fronx Launch Next Week

இந்த மாருதி ஃப்ரான்க்ஸ் காரை பொருத்தவரை மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளனது. முதல் ஆப்ஷனாக 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் தான் பலேனோ ஆர்எஸ் காரில் பொருத்தப்பட்டிருந்தது. அந்த கார் நிறுத்தப்பட்ட பின்பு இந்த காரில் பொருத்தப்படுகிறது.

இந்த இன்ஜின் 100.6 பிஎஸ் பவரை 5500 ஆர்பிஎம்மிலும், அதிகபட்சமாக 147.6 என்எம் டார்க் திறனையும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இன்ஜினாக 1.2 லிட்டர் கே சிரீஸ் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 89.73 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த இரண்டு இன்ஜின்களின் மைலேஜ் விபரங்கள் கசிந்திருந்தது. அதன்படி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியரில் லிட்டருக்கு 21.5 கி.மீ மைலேஜூம், ஆட்டோமெட்டிக் வேரியன்டில் லிட்டருக்கு 20.01 கி.மீ மைலேஜூம் வழங்கும் என்றும். 1.2 லிட்டர் இன்ஜினை பொருத்தவரை மேனுவல் கியரில் லிட்டருக்கு 21.79 கி.மீ மைலேஜூம், ஆட்டோமெட்டிக் வேரியன்டில் 22.89 கி.மீ மைலேஜூம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3995 மிமீ நீளமும், 1765 மிமீ அகலமும், 1550 மிமீ உயரமும், 2520 மிமீ வீல் பேஸூம் கொண்டது. இந்த கார் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த காரில் பூட் கொள்ளளவாக 308 லிட்டரும், பெட்ரோல் டேங்க் கொள்ளளவாக 37 லிட்டரும் கொண்டிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கையை தாண்டி அசைக்க முடியாத பாசத்தை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனம் வெளியிடும் இந்த காருக்கு மக்கள் அதிகம் காத்திருக்கின்றனர். எஸ்யூவி செக்மெண்டில் மாருதி ஜொலிக்கவில்லை என்ற பெயரை இந்த கார் மார்கெட்டில் மாற்றிக்காட்டும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 21, 2023, 9:41 [IST]
English summary
Maruti suzuki set to launch fronx suv next week sold in next dealers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X