இன்னோவா காரின் கதையை முடிக்க தேதி குறிச்சுட்டாங்க! மாருதியோட இந்த கார் வந்ததும் இன்னோவா காணமலேயே போயிடும்!
மாருதி நிறுவனம் தனது 7 சீட்டர் எம்பிவி பிரிமியம் காரான என்கேஜ் காரின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இந்த கார் டொயோட்டோ நிறுவனத்தின் இன்னோவா எம்பிவி காரை அடிப்படையாகக் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
டொயோட்டா மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி இரு நிறுவனங்களும் தங்கள் தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி டொயோட்டா நிறுவனத்தின் சில கார்களை அடிப்படையாகக் கொண்டு மாருதி நிறுவனமும், மாருதி நிறுவனத்தின் சில கார்களை அடிப்படையாகக் கொண்டு டொயோட்டா நிறுவனமும் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாருதி நிறுவனம் தனது ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி காரை தொடர்ந்து டொயோட்டா இன்னோவா காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூன்று வரிசை பிரிமியம் எம்பிவி காரை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த காருக்கு என்கேஜ் என பெயரும் வைத்தது. மாருதி நிறுவனம் இந்த என்கேஜ் எம்பிவி காரை ஜூலை மாதம் 5ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மாருதி நிறுவனத்தின் இந்த என்கேஜ் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வெர்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இது டொயோட்டோ இன்னோவா ஹைகிராஸ் காரின் தொழிற்நுட்பத்தை அப்படியே எடுத்து வடிவமைக்கப்பட்ட காராக இருக்கும் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி நிறுவனத்திடம் ஏற்கனவே எக்ஸ்எல் 6 மற்றும் எர்டிகா ஆகிய இரண்டு மூன்று வரிசை எம்பிவி கார்கள் விற்பனையில் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது காராக என்கேஜ் இணைந்துள்ளது. ஆனால் இது முற்றிலும் புதிய செக்மெண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த கார் குறித்து மாருதி நிறுவனத்தின் சேர்மன் ஆர் சி பார்கவா கூறும்போது : "இந்த கார் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே டொயோட்டா நிறுவனத்தின் இது போன்ற கார் தற்போது 12 மாத காத்திருப்பு கால அளவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. மாருதி நிறுவனத்திற்கும் இதே போன்ற வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்."எனக் கூறினார்.
டொயோட்டோ நிறுவனத்தின் காரை மாருதி வெளியிடுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. இதற்கு முன்பு இது போன்ற பல கார்களை இரு நிறுவனங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரேடர் ஆகிய கார்கள் ஒரே அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
அதற்கு முன்னர் மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார்களும் மாருதி பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களும் ஒரே கார்களாக ரீ-பேட்ஜ் வெர்ஷனாக ஒன்று மாற்றி ஒன்று விற்பனைக்கு அறிமுகமானது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தம் தொடரும் என கூறப்படுகிறது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் லாபம் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி என்கேஜ் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்குகிறது. டொயோட்டா மாருதி ஒப்பந்தத்தின் படி வெளியான கார்களில் பெரும்பாலும் மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் அதிகமான விற்பனையை பெற்றது. தற்போது என்கேஜ் மார்கெட்டில் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போறது என பொறுத்திருந்து காணலாம்.


Click it and Unblock the Notifications







