40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் காரை பற்றி வெளியான புதிய தகவல்! இந்த வசதியை எல்லாம் தர போறாங்களா!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரின் புதிய தலைமுறை (New-gen) மாடல் விற்பனைக்கு வர இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 3வது தலைமுறை மாடல்தான் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விற்பனைக்கு வரப்போவது 4வது தலைமுறை (4th Gen) மாடல் ஆகும்.

ஜப்பான் மொபிலிட்டி ஷோ (Japan Mobility Show) வாகன திருவிழாவில், 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவில் அதன் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த சோதனை ஓட்டம் மூலமும், 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் குறித்த பல்வேறு புதிய தகவல்கள் (New Details) நமக்கு கிடைத்து வருகின்றன.

Maruti Suzuki Swift 4th Gen

இதன்படி 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், (Blind Spot Monitor) வசதி இடம்பெறலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் கார்களில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. எனவே 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் வசதியுடன் விற்பனைக்கு வரலாம்.

இதுதவிர ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகள் உடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களும், 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவுள்ளன. உட்புறத்தை பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் இடம்பெறலாம்.

Maruti Suzuki Swift 4th Gen Rear Profile

ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதற்கு இவை எதுவும் காரணம் இல்லை. மாறாக இந்த புதிய மாடலில் வழங்கப்படவுள்ள புத்தம் புதிய இன்ஜின்தான், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இஸட்-சீரிஸ் இன்ஜின் உடன், ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதன் காரணமாக புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், ஒரு லிட்டருக்கு சுமார் 40 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை, வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இதை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். சிறப்பான மைலேஜ் கிடைக்க கூடியதாக இருந்தாலும் கூட அடாஸ் (ADAS) வசதிகள் நமக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

அதாவது சர்வதேச சந்தைகளுக்கான புதிய ஸ்விஃப்ட் காரில், லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய சந்தைக்கான ஸ்விஃப்ட் காரில், இது இடம்பெறுமா? என்பது சந்தேகம்தான். விலை (Price) குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அடாஸ் வசதிகள் தவிர்க்கப்படலாம் என தெரிகிறது.

Advanced Driver Assistance Systems என்பதன் சுருக்கம்தான் ADAS. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் கார்களில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு பாதுகாப்பு வசதி (Safety Feature) ஆகும். கார் வாங்கும்போது அடாஸ் வசதி இருக்கிறதா? என்பதையும் வாடிக்கையாளர்கள் தற்போது பார்க்க தொடங்கியுள்ளனர்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் அடாஸ் வசதி வழங்கப்படாவிட்டாலும் கூட, தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரின் அடாஸ் வசதியுடன் கூடிய புதிய வேரியண்ட் (Variant) விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, November 6, 2023, 16:31 [IST]
English summary
Maruti suzuki swift 4th gen new details out check here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+