சிங்கம் களம் எறங்கீருச்சு! 40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் அறிமுகம்! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது 3வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஆகும். இதன் 4வது தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வேகமாக தயார் ஆகி வருகிறது.

4th-gen Maruti Suzuki Swift Unveiled

தற்போது நடைபெற்று வரும் ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 (Japan Mobility Show 2023) வாகன திருவிழாவில், 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில் கான்செப்ட் மாடலாக இது வெளியிடப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரவுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாகும். எனவே இதன் புதிய தலைமுறை மாடலை, வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக உங்களுக்குதான் இந்த செய்தி. ஏனெனில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் குறித்த முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

4th-gen Maruti Suzuki Swift Front

டிசைன் (Design): மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் வடிவம் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் தற்போது மாடர்ன் ஆகவும், முரட்டுத்தனமாகவும் இதன் டிசைன் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் வட்ட வடிவிலான க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தேன் கூடு வடிவிலான பேட்டர்ன் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பகல் நேர விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர அலாய் வீல்களுக்கும் புதிய டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பின் பகுதியை பொறுத்தவரையில், டெயில்கேட் மற்றும் பம்பர் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த புதிய மாடலின் டிசைன் அனைவரையும் கவரக்கூடியதாகவே இருக்கிறது.

4th-gen Maruti Suzuki Swift Rear

கேபின் (Cabin): புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் கேபினை பார்த்த உடனேயே நமக்கு ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களான பலேனோ (Baleno), ஃப்ரான்க்ஸ் (Fronx) மற்றும் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) ஆகிய கார்களின் கேபினை போன்றே, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் கேபினும் இருக்கிறது என்பதுதான் அது.

இந்த 3 கார்களில் வழங்கப்பட்டுள்ள அதே ஸ்டியரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவைதான், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த அனைத்து கார்களின் கேபினும் ஒன்று போலவே இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. எனினும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் டேஷ்போர்டு தனித்துவமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

4th-gen Maruti Suzuki Swift Cabin

வசதிகள் (Features): புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்க போகிறது? என்ற தகவல் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. எனினும் கேபினை பார்க்கும்போது, ஒரு சில வசதிகளை நம்மால் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இதில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும். இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது நாம் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், நிறைய ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் ஆகியவற்றை நாம் எதிர்பார்க்கலாம். இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைத்தார்போல், அடாஸ் வசதிகளும் (ADAS Features), புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜின் (Engine): புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் என்ன இன்ஜின் வழங்கப்பட இருக்கிறது? என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அதிக மைலேஜ் (Mileage)வழங்க கூடிய இன்ஜின் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த புதிய மாடல் மீதான எதிர்பார்ப்புகளை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் 4-சிலிண்டர் கே-சீரிஸ் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. மறுபக்கம் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.56 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிஎன்ஜி (CNG) வெர்ஷனிலும் கிடைக்கிறது. இந்த சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவுள்ள புதிய இன்ஜின் இவை அனைத்தையும் காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புதிய இஸட்-சீரிஸ் (New Z Series Engine) இன்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் ஆகும். தற்போதைய நிலையில் Z12 என்ற குறியீட்டு பெயரில் இந்த இன்ஜின் அழைக்கப்படுகிறது.

இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனினும் கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக இன்னும் 5-6 மாதங்களில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் களமிறக்கப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை (Price) 5.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதைக்காட்டிலும் சற்று அதிகமான விலையில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் களமிறங்கவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 12:04 [IST]
English summary
Maruti suzuki swift 4th gen unveiled 40 kmpl mileage engine features design price all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X