40 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்கள்! பைக் கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூட போறாங்க! கனவுல கூட இதை நெனச்சு பாக்கல

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு மைலேஜ் (Mileage) மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி கார்கள் மைலேஜை வாரி வழங்குவதால், வாடிக்கையாளர்கள் பலர் அவற்றை ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர்.

இந்த சூழலில் தொடர்ச்சியாக அதிக மைலேஜ் வழங்கும் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்து, வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்கு தேவையான முயற்சிகளை மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid).

40 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்கள்! பைக் கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூட போறாங்க! கனவுல கூட இதை நெனச்சு பாக்கல

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் 2 புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை (Cars) அறிமுகம் செய்யவுள்ளது. அந்த 2 புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் குறித்து, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம்.

அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 கார்கள் ஸ்விஃப்ட் (Swift) மற்றும் டிசையர் (Dzire). இந்த 2 கார்களின் புதிய தலைமுறை மாடல்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

40 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்கள்! பைக் கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூட போறாங்க! கனவுல கூட இதை நெனச்சு பாக்கல

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் புதிய தலைமுறை மாடல்களில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த 2 கார்களிலும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என வெளியாகி வரும் தகவல்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது மட்டும் நடந்து விட்டால், இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களாக இவை இரண்டும் இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சில பைக்குகள் கூட ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குவதில்லை. எனவே ஒரு சில பைக்குகளை காட்டிலும் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களாக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் ஆகிய 2 கார்களும், இந்திய சந்தையில் அனேகமாக வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Article Published On: Monday, March 6, 2023, 11:52 [IST]
English summary
Maruti suzuki swift dzire 40 kmpl mileage strong hybrid details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+