குறைவான பெட்ரோலில் ஓடும் மாருதி வேகன்ஆர் கார் அறிமுகம் எப்போது? எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ சீக்கரமே வரஇருக்குதா
மாருதி சுஸுகியின் முதல் ப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வேகன்ஆர் கார் எந்த ஆண்டில் அறிமுகமாக இருக்கின்றது என்கிற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் தற்போது முற்றிலுமாக டீசல் வாகன உற்பத்தியை கைவிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அது, பெட்ரோல், எல்பிஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களை மட்டுமே தயாரித்து வருகின்றது. இந்த நிலையிலேயே கூடுதலாக ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களையும் நிறுவனம் உருவாக்கத் தொடங்கி இருக்கின்றது.

கொஞ்சம் பெட்ரோல் போதும்
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வேகன்ஆர் காரை மாருதி சுஸுகி காட்சிப்படுத்தியது. இந்த வாகனத்தையே விரைவில் இந்தியா சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறைவான பெட்ரோல், அதிக எத்தனாலில் இயங்கும் வாகனங்களே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் ஆகும்.
இன்னும் தெளிவாக கூற வேண்டும் எனில் இ20 மற்றும் இ85 ரக எத்தனால் - பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட வேகன்ஆர் காரையே நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோலைக் கொண்டும் இயக்கிக் கொள்ள முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த திறன் காரணமாகவே இவற்றை ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் என வாகனத்துறை குறிப்பிடுகின்றன.

பெட்ரோலுக்காக இனி அதிக காசு செலவு பண்ண வேண்டாம்
மாசுபாட்டைக் குறைப்பது, பெட்ரோலுக்காக செலவிடப்படும் அதிக தொகை சுமையைக் குறைப்பதை மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது என பலவற்றிற்கு தீர்வாக இந்த வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. மாருதி சுஸுகி மட்டுமின்றி சில இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் ப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை கையில் எடுத்து இருக்கின்றன.
பஜாஜ், டிவிஎஸ், ஹோண்டா உள்ளிட்ட முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்களே ஏற்கனவே இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனத்தை மாருதி சுஸுகி களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் தனது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வேகன்ஆர் காரை வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

மேட்-இன் இந்தியா தயாரிப்பு
முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உருவாக்க பணியில் சுஸுகியின் ஜப்பானைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் கை கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களின் பயன்பாட்டினால் கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் குறையப்போவதில்லை, நாட்டின் விவசாய பணிகளும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது.
எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்க போறாங்க
பெட்ரோலில் அதிகளவில் கலக்கப்பட உள்ள எத்தனாலை விவசாய கழிவுகளில் இருந்தே தயாரிக்க முடியும். ஆகையால், குறிப்பாக கரும்பு போன்றவற்றின் உற்பத்தி இந்தியாவில் பலமடங்கு விரிவடைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், மாருதி சுஸுகியின் இந்த தயாரிப்பின்மீது அனைவரின் கண் பார்வையும் பட தொடங்கி இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை மட்டும் இல்லைங்க, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இதுதான் அவங்க திட்டம்
இதற்கான காலகெடுவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் வாகனங்களும் 2025 ஆம் ஆண்டிற்கு உள்ளாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் தன்னுடைய ஒட்டுமொத்த தயாரிப்பையும் 15 சதவீதம் மின்சார வாகனமாகவும் மாற்றவும் அது திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, 25 சதவீதம் ஹைபிரிட் வாகனங்களையும், 60 சதவீதம் ஐசிஇ (சிஎன்ஜி, பயோகேஸ் மற்றும் எத்தனால் பவர்டு) வாகனங்களை தயாரிக்க அது திட்டம் போட்டு இருக்கின்றது.
பசுமை இயக்கத்தை நோக்கியே மாருதி சுஸுகி இந்த மாதிரியான திட்டத்துடன் இந்தியாவில் நகர தொடங்கி இருக்கின்றது. தற்போது உலகளவில் காற்று மாசு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்தியாவிலும் இந்த பிரச்னை தலைவிரித்தாடுகின்றது. ஆகையால், மின்சார வாகன பயன்பாட்டை அரசும், வாகன உற்பத்தியாளர்களும் ஊக்குவிக்கும் பணியில் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









