எல்லாரும் இந்த மாருதி காரை வாங்கி குவிக்க போறாங்க... 32.12 கிமீ மைலேஜ் தரும் டூர் எஸ் அறிமுகம்!
21 சதவீதம் அதிகம் மைலேஜ் தரும் மாருதி சுஸுகி டிசையர் டூர் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கால் டாக்சி டிரைவர்களுக்கு அதிக லாபம் ஈட்டி தரும் விதமாக இதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மாருதி சுஸுகி. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் டிசையர் டூர் எஸ் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கணிசமான புதிய அப்டேட்டுகளுடன் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 6.51 லட்சத்தில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான வாகனம்
இது பெட்ரோல் வேரியண்டின் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் சிஎன்ஜி தேர்விற்கு ரூ. 7.36 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு விலைகள் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. டிசையர் டூர் எஸ், வாடகை வாகன பிரிவிற்கான பிரத்யேக தேர்வாகும். ஆமாங்க, கேப் சேவைக்கென்றே பிரத்யேகமாக இந்த மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
21 சதவீதம் அதிகம் மைலேஜ் தரும்
டாக்சி வாகன ஓட்டுநர்களுக்கு அதிக லாபத்தை தரும் விதமாக கணிசமான மாற்றங்கள் இதில் செய்யப்பட்டு உள்ளன. இதன் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 32.12 கிமீ மைலேஜை வழங்கும். இது தற்போது விற்பனையில் இருக்கும் சிஎன்ஜி வெர்ஷனைக் காட்டிலும் 21 சதவீதம் அதிக ரேஞ்ஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே அதிக லாபத்திற்கு நிச்சயம் புதிய டிசையர் டூர் பெரும் உதவியாக இருக்கும்.

இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 23.15 கிமீ ரேஞ்ஜை தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரின் முகப்பு பகுதியையும் மாருதி சுஸுகி கணிசமாக மாற்றி இருக்கின்றது. இத்துடன் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் டூர் எஸ் பேட்ஜ் ஆகியவற்றின் ஸ்டைல்களும் லேசாக ரிவைஸ் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் டிசையர் டூர் எஸ் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.
சூப்பர் நிற தேர்வுகள்
ஆர்க்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சில்கி சில்வர் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும். புதிய அம்சமாக இந்த காரில் டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல், மேனுவல் ஏர் கன்டிஷனிங் பொல்லன் ஃபில்டருடனும் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர்கள் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டூர் லாக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் டிசையர் டூர் எஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவ்ளோ பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கா!
இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன், பிரேக் அசிஸ்ட், ஸ்பீடு லிமிட்டிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரட்டை ஏர் பேக்குகள் என எக்கசக்க அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
எந்த எஞ்ஜினை பயன்படுத்தி இருக்காங்க?
மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஐந்தாம் தலைமுறை ஹார்டெக்ட் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே டிசையர் டூர் எஸ் காரை அப்டேட் செய்திருக்கின்றது. இந்த தளத்தின் வாயிலாகவே அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனமாக அது மாற்றப்பட்டு இருக்கின்றது. புதிய டிசையர் டூர் எஸ் காரின் அதிக மைலேஜிற்கு அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் மோட்டாரே காரணமாக உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
அதேவேளையில் சிஎன்ஜி வெர்சன் சற்று குறைவாக 76 பிஎச்பி பவரையும், 98.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இரண்டு வெர்ஷன்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வே வழங்கப்படும். இதில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீப காலமாக மாருதி சுஸுகி டிசையர் மாடலின் விற்பனைக்குக் குறைந்த வண்ணம் இருக்கின்றது. இதனை மாற்றி விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விதமாக புதிய அப்டேட்டட் டூர் எஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








