முழு சார்ஜில் 550 கி.மீ. பயணிக்கலாம்! முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்திய மாருதி!
மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவிஎக்ஸ் காரை ஆட்டோ எக்ஸ்போ 2023ல் முதல் காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்
மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நம்பர்1 நிறுவனம் இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது பல கார்களை புதிதாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் தான் ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் காராக தனது எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி நிறுவனம் அதிகமாக கார்களை விற்பனை செய்துவந்தாலும் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் ஒரு காரை கூட இதுவரை வெளியிடாமல் இருந்தது.

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் காலூன்றி மிகப்பெரிய மார்கெட் பங்கை பிடித்துவிட்டது. இந்நிலையில் மாருதி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார் உலகில் தனது கால் தடத்தைப் பதிக்க தயாராகிவிட்டது. இந்நிலையில் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை ஆட்டோஎக்ஸ்போ2023ல் முதல் காராக அறிமுகப்படுத்தியுள்ளது.
மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் என்ற காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை மாருதி நிறுவனம் 4X4 காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பை சுஸூகி நிறுவனம் செய்துள்ளது. இந்த காருக்காக பிரத்தியேகமாக ஒரு பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டு அதில் இந்த கார் கட்டமைக்கப்படுகிறது. இந்த காரின் அளவுகளைப் பொருத்தவரை 4300 மிமீ நீளம் கொண்டது. 1800 மிமீ அகலம் கொண்டது. 1600 மிமீ உயரம் கொண்டது.

இந்த கார் குறித்து பலரும் எதிர்பார்க்கும் தகவல் இந்த காரின் பேட்டரி மற்றும் ரேஞ்ச் தான். இந்த காரில் 60 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது சேஃப் பேட்டரி தொழிற்நுட்பத்தின்படி இந்த கார் உருவாக்கப்படுகிறது. இந்த பேட்டரியில் இந்த கார் 550 கி.மீ ரேஞ்சை தரும் என மாருதி நிறுவனம் கூறியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை வழக்கமான எஸ்யூவி டிசைன் வழங்கப்பட்டுள்ளது. நீளமான வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது. ஓவர் ஹேங்க்கள் சிறியதாகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் சிறப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் நாம் முன்னரே சொன்னது போல பிரத்தியேக பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியும் சேஃப் பேட்டரி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கேபின் கம்ஃபோர்ட்டாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் கனெக்டெட் தொழிற்நுட்பங்கள் இடம்பெறவுள்ளது. இந்த காரை தயாரிக்க மாருதி நிறுவனம் ரூ 100 பில்லியனை முதலீடு செய்துள்ளது. இந்த கார் கான்செப்ட் கார் என்பதால் இந்த கார் குறித்த இவ்வளவு தகவல்கள் மட்டும் தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் தயாரிப்பிற்கு வரும் போது தான் மற்ற தகவல்கள் எல்லாம் வெளியாகும்.
தற்போது டாடாவிற்கு போட்டியாக மாருதி நிறுவனம் முதன் முறையாகத் தனது எலெக்ட்ரிக் காரை களம் இறக்க தயாராகியுள்ளது,மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பலர் இந்த கார் குறித்துப் பேசி வருகின்றனர். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








