லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்! விலை இவ்ளோதானா! பைக் ஷோரூம்லாம் வெறிச்சோட போகுது!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் தீவிரமாக புதிய கார்களை களமிறக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத கடைசியில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து நடப்பு ஜூன் மாதம் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) களமிறக்கப்பட்டது. இந்த வரிசையில் வரும் ஜூலை 5ம் தேதி மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடந்த 3 மாத கால அளவில், மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கும் 3வது கார் இதுவாகும்.

இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும் (கூட்டணி இருப்பதால், இந்த 2 நிறுவனங்களும் கார்களை பரிமாறி கொள்கின்றன என்பதை இங்கே உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்).
பிரீமியம் எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் விலை (Price) உயர்ந்த கார் என்ற பெருமையை இன்விக்டோ பெறவுள்ளது. எனவே இது நடுத்தர வர்க்க மக்களுக்கான கார் அல்ல. ஆனால் இதற்காக நடுத்தர வர்க்க மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இன்விக்டோ காரை தொடர்ந்து, நடுத்தர வர்க்க மக்களுக்காக 2 புதிய கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பைக்குகளை விட அதிக மைலேஜ் (Mileage) தரக்கூடிய அந்த 2 புதிய கார்களை பற்றிய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New-gen Maruti Suzuki Swift): புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் உட்புற மற்றும் வெளிப்புற டிசைன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் ஹைலைட்டே, அதன் ஹைப்ரிட் (Hybrid) இன்ஜின்தான்.

இது 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதான் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் மிகப்பெரிய பலமாக இருக்க போகிறது.
ஏனெனில் ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜ் என்பது, கார்களில் நாம் முன்னெப்போதும் கேள்விபட்டிராத ஒரு விஷயம் ஆகும். மைலேஜை வாரி வழங்க கூடிய இந்த இன்ஜின், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் நடுத்தர மற்றும் டாப் வேரியண்ட்களில் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், ஜப்பானில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2024ம் ஆண்டின் தொடக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். இதை தொடர்ந்து இந்தியாவில் 2024ம் ஆண்டின் முதல் பாதியில், அதாவது ஜூன் மாதத்திற்கு உள்ளாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் (New-gen Maruti Suzuki Dzire): புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவுள்ள அதே ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரிலும் கொடுக்கப்படவுள்ளது. எனவே இந்த காரிலும், ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜை நாம் எதிர்பார்க்கலாம்.
புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து, 2024ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது ஜூன்-டிசம்பர் காலகட்டத்தில், புதிய தலைமுறை டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த 2 கார்களும், நடுத்தர வர்க்க மக்களும் வாங்க கூடிய விலையில், அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மைலேஜ் என்ற விஷயத்தில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள், இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பல்வேறு புதிய அதிநவீன வசதிகளும் (Features) இந்த 2 கார்களிலும் கொடுக்கப்படவுள்ளன. எனவே இவை இரண்டும் விற்பனையில் சாதிக்கலாம் என்பது எங்கள் கருத்து.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாயாக இருக்கிறது. புதிய தலைமுறை மாடலின் ஆரம்ப விலை 6.25 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதேநேரத்தில் மாருதி சுஸுகி டிசையர் காரின் தற்போதைய ஆரம்ப விலை 6.50 லட்ச ரூபாயாக உள்ளது. இதன் புதிய தலைமுறை மாடலின் ஆரம்ப விலை 6.75 லட்ச ரூபாயாக இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் விலையாகும்.


Click it and Unblock the Notifications









