34 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்! விலை இவ்ளோதானா! சேல்ஸ் பிச்சு ஒதறுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கடந்த 1999ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் மீதான மோகம், இந்திய மக்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை.

ஆம், நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் 14,720 வேகன் ஆர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Maruti Suzuki Wagon R

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 16,567 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், இந்தியாவிலேயே அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி வேகன் ஆர் தன்வசப்படுத்தியுள்ளது.

குறைவான விலையில் (Price) கிடைப்பதும், அதிக மைலேஜை (Mileage) வாரி வழங்குவதும்தான் மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் ஆகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.54 லட்ச ரூபாய் மட்டுமே.

Maruti Suzuki Wagon R Rear View

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 7.42 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்ட பின்னரும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனையில் சாதனைகளை படைத்து கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஒரு வேளை எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரலாம்.

ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். எனினும் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து கூடிய விரைவில் எலெக்ட்ரிக் கார்களை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) ஆகும். வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 18:47 [IST]
English summary
Maruti suzuki wagon r registers 13 per cent growth in november 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+