34 கிமீ மைலேஜ் குடுக்கும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! வாங்கறதுக்கு பெரிய அடிதடியே நடந்துகிட்டு இருக்கு!
இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது உண்மைதான். அதற்காக ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை, வாடிக்கையாளர்கள் அப்படியே ஒதுக்கி விடவில்லை. ஹேட்ச்பேக் ரக கார்களையும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகளவில் வாங்கி கொண்டுதான் உள்ளனர்.
இதற்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் ஒரு உதாரணம். நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் (October 2023) இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர், முதலிடத்தை தட்டி தூக்கியுள்ளது.

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22,080 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 17,945 ஆக மட்டுமே இருந்தது. இது 23 சதவீத வளர்ச்சி ஆகும்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் கார்களில் ஒன்றாகும். மிகவும் சரியாக சொல்வதென்றால், கடந்த 1999ம் ஆண்டில் இருந்து மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியான அப்டேட்கள் மூலம் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னமும் வேகன் ஆர் காருக்கு என மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கையில் வைத்துள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இருப்பதற்கு மைலேஜ் (Mileage) மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேனுவல் (Manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (Automatic) என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்படுகின்றன.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடல் ஒரு லிட்டருக்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கும் மைலேஜ் கிடைக்காது என்பதுதான் பொதுவான ஒரு கருத்து. ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் அந்த பொதுவான கருத்தை உடைத்துள்ளது.
ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கும் மைலேஜ் கிட்டத்தட்ட அப்படியே கிடைப்பதாக வேகன் ஆர் காரின் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இவ்வளவு அதிக மைலேஜ் வழங்க கூடியதாக இருந்தாலும் கூட மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.54 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.42 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மேலும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ், தேவையான வசதிகள் ஆகிய அம்சங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது பண்டிகை காலம் (Festive Season) என்பதால், நடப்பு நவம்பர் (November) மாதத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடப்பு நவம்பர் மாதத்தில் எவ்வளவு மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனையாக போகின்றன? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








