இந்த காரை வாங்கினவங்களே வந்து வந்து வாங்குறாங்களா! 24வருடங்களில் 30லட்சம் யூனிட் விற்பனையை எட்டிய மாருதி கார்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் வேகன்ஆர் (WagonR) காரும் ஒன்று. இது ஓர் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வேகன்ஆர் மிக மிக அதிகளவில் விற்பனையைப் பெற்று புதிய சாதனை மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் காரை 1999 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து இப்போது வரை அந்த கார் மாடலுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக வேகன்ஆர் மாறி இருக்கின்றது.

இதன் விளைவு அது விற்பனைக்கு வந்து 24 ஆண்டுகள் மட்டுமே ஆகின்ற நிலையில் 30 லட்சத்திற்கும் அதிகமான வேகன்ஆர் கார் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த அதீத விற்பனை எண்ணிக்கை பற்றிய தகவலை மாருதி சுஸுகி நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஏற்கனவே இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களே மீண்டும் மீண்டும் வந்து வாங்கிக் கொண்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த தகவல் மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. 24 சதவீதம் வாடிக்கையாளர்களே ஏற்கனவே வேகன் காரை பயன்படுத்தி வரும்நிலையில் அந்த காரை மீண்டும் வாங்கி இருக்கின்றனர்.

இதுபோன்று தொடர்ச்சியாக வேகன்ஆர் காரை வாடிக்கையாளர்கள் வாங்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம் அதன் மலிவு விலை ஆகும். அதேவேளையில், அதிக சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பரந்த இட வசதி ஆகியவற்றைக் கொண்ட காராகவும் வேகன்ஆர் இருக்கின்றது. இது தவிர இதன் ஹெட்ரூம் வசதியும் அதிகம்.
இதுபோல் இன்னும் பல காரணங்களுக்காக இந்த கார் பெட்டி கடையில் கடலை மிட்டாய் விற்பனையாவதைப் போல விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. அதன் மைலேஜ் திறனும் அதில் ஒன்றாகும். வேகன்ஆர் 23.56 கிமீ முதல் 34.05 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறன் கொண்டது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.

அது அதிக மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இந்திய சந்தையில் இப்போது விற்பனையில் இருப்பது மூன்றாம் தலைமுறை வேகன்ஆர் ஆகும். இதில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் ஆகிய பெட்ரோல் மோட்டார் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. இதுதவிர, எஸ்-சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகின்றது.
அதில், 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பாதுகாப்பு வசதிகளையும் இந்த காரில் மாருதி சுஸுகி வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ப்ரோக்ராம், ரியர் பார்க்கிங் கேமிரா சென்சார்கள், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், நவீன தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் இந்த கார் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது.
7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் ஃபோன் நேவிகேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் கேபிள் இணைப்பு, ப்ளூடூத் மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் அம்சம் ஆகியவையும் வேகன்ஆர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
விலையை பொருத்த வரை ரூ. 5.50 லட்சம் தொடங்கி ரூ. 7.30 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இத்தகைய மலிவு விலை மற்றும் மேலே பார்த்த சிறப்பம்சங்களே மாருதி சுஸுகி வேகன்ஆர் காரை இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் காராக மாற்றி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக மாருதி சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. மேலும், பட்ஜெட் விலையைில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இன்னும் அடுத்து சில ஆண்டுகளுக்கும் இந்த காரே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருக்கும் என நாங்கள் யூகிக்கின்றோம்.


Click it and Unblock the Notifications









