மாருதி சுஸுகியின் மானத்தை வாங்கிய வேகன்ஆர்.. இப்படி மண்ணை கவ்வும்னு யாருமே எதிர்பார்க்கல! ஒரே அசிங்கமா போச்சு!

மாருதி சுஸுகியின் புகழ்பெற்ற கார் தயாரிப்புகளில் வேகன்ஆர் மாடலும் ஒன்று. இந்த காரை குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. காரின் பாதுகாப்பு திறன்குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வேகன்ஆர் மண்ணைக் கவ்வி இருக்கின்றது. ஐந்திற்கு வெறும் 1 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே வேகன்ஆர் பெற்றிருக்கின்றது.

இந்த தகவல் வேகன்ஆர் கார் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, மாருதி சுஸுகி நிறுவனத்தை கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் இந்த தகவல் அமைந்திருக்கின்றது. 1 ஸ்டார் என்பது பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் பெறப்பட்ட ரேட்டிங் ஆகும். அதேவேளையில் குழைந்தகளுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஒரு ஸ்டாரைகூட பெறவில்லை.

Maruti Suzuki WagonR Global NCAP

ஆம், பூஜ்ஜியம் ஸ்டாரை மட்டுமே அது பெற்றிருக்கின்றது. இந்த தகவல் ஷாக்கிற்கே ஷாக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. சென்ற முறை இதேபோல் மோதல் ஆய்விற்கு வேகன்ஆர் உட்படுத்திய-போது குறைந்தபட்சமாக ஐந்திற்கு 2 ஸ்டார்களை அது பெற்றது. இந்த பழைய தர மதிப்பைகூட இந்த முறை பெறாதது அனைவருக்கும் கூடுதல் அதிர்ச்சி தகவலாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, மாருதி தன் தயாரிப்பின் தரத்தை குறைத்துவிட்டதோ என்கிற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால், இதற்கு வேறு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு 2019ல் செய்யப்பட்டது. அப்போது இருந்ததைக் காட்டிலும் இப்போது மோதல் ஆய்வுகள் மிகக் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.

Maruti Suzuki WagonR Global NCAP

சிறிதும் சமரசம் இன்றி கடுமையான ஆய்விற்கு குளோபல் என்சிஏபி தன்னிடம் வரும் கார்களை ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே மாருதி சுஸுகி வேகன்ஆர் காரால் பழைய தர மதிப்பைக்கூட பெற முடியாமல் போயிருக்கின்றது. புதிய வேகன்ஆர் காரில் முன் பக்கத்தில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்து காத்திருப்பது புதிய ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

டிரைவரின் தலை, மார்பகம், வலது பக்கம் கால் மற்றும் தொடை ஆகிய பகுதிகளுக்கே அதிக ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இதேபோல், முன் பக்க பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவருக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. குறிப்பாக தொடை பகுதிக்கு அதிக பாதிப்பும், மார்பகத்திற்கு சற்று குறைவான பாதிப்பும் ஏற்படும் சூழல் வேகன்ஆரில் நிலவுகின்றது.

இத்தகைய ஆபத்தான சூழலையே விபத்துகளின்போது ஏற்படும் வகையில் வேகன்ஆர் இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே அதற்கு வெறும் 1 ஸ்டார் மட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் நம்பர் விற்பனையாகும் கார் மாடல் வேகன்ஆர் ஆகும். ஒவ்வொரு மாதமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய காரில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக மாறி இருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை வாகனமாகவும், அதிக இட வசதிக் கொண்ட வாகனமாகவும் வேகன்ஆர் இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியர்களின் ஃபேவரிட் காராக வேகன்ஆர் இருக்கின்றது.

ஆனால், இதில் பாதுகாப்பு என்பது மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதேவேளையில், இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக டூயல் ஏர்பேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூசன் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஏஎம்டி வசதி, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என பற்பல அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இந்தியர்களின் ஃபேவரிட் கார் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டையை விட்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

வரும் காலத்திலாவது மாருதி சுஸுகி இந்த காரின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக மாறி இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் கார் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டாவது மாருதி தன்னுடைய தயாரிப்புகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கின்றது.

Article Published On: Tuesday, April 4, 2023, 17:39 [IST]
English summary
Maruti suzuki wagonr scored 1 star out of 5 star in global ncap
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+