வெறும் 30 நிமிடங்களில் காருக்கு கடனுதவி!! மாருதி சுஸுகி - எச்.டி.எஃப்.சி நிறுவனங்களின் புதிய இன்ஸ்டண்ட் லோன்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் எஃப்.டி.எஃப்.சி (HDFC) வங்கி உடன் இணைந்து புதிய கார் கடனுதவி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மாருதி சுஸுகியின் இந்த புதிய கடனுதவி வசதியை பற்றியும், இதன் மூலம் மாருதி சுஸுகி கார்களை எவ்வாறு வாங்குவது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. சமீப காலமாக அதிகளவில் புது புது கார்களை அறிமுகப்படுத்தி வரும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் முதல் இணைய எண்ட்-டூ-எண்ட் கார் நிதியுதவி பிளாட்ஃபாரத்தை கடந்த 2020ஆம் ஆண்டில் 'மாருதி சுஸுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது.

கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் சவுகரியமான ஃபைனான்ஸ் ஆப்ஷன்களை வழங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிதித்தேர்வுகளை உள்ளடக்கியதாக இந்த ஆன்லைன் பிளாட்ஃபாரத்தை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த பிளாட்ஃபாரத்தின் மூலமாக, மாருதி சுஸுகி கார்களை சொந்தமாக்குவதற்கு கடனுதவிகளை வழங்கும் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வாடிக்கையாளர்கள் லோன் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
அதுமட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு பகுதியில் இருப்பவரும் தனது கடன் தகுதியை சரிப்பார்த்து கொண்டு, சலுகைகளுடனும் கடனுதவியை பெற முடியும். இந்த நிலையில், மாருதி சுஸுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் பிளாட்ஃபாரத்தில் 'எக்ஸ்பிரஸ் கார் லோன்ஸ்' (Xpress Car Loans) என்கிற உடனடி கடனுதவி வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாருதி சுஸுகி - எச்.டி.எஃப்.சி நிறுவனங்களின் கூட்டணியில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த கடனுதவி வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் உடனடியாக கடனுதவியை பெற முடியும்.

எந்த அளவிற்கு என்றால், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் அவர்கள் விருப்பப்படும் ஃபைனான்ஸியரை தேர்வு செய்து வெறும் 30 நிமிடங்களுக்குள் கடனுதவியை பெற்றுக் கொள்ள முடியுமாம். அதுமட்டுமில்லாமல், எக்ஸ்பிரஸ் கார் லோன்ஸ் வசதியின் மூலமாக வாடிக்கையாளர்கள் சவுகரியமாகவும் கடனுதவியை பெற முடியும் என்கிறது மாருதி சுஸுகி நிறுவனம்.
முழுக்க முழுக்க இணைய வழியாக நடைபெறுவதால், எக்ஸ்பிரஸ் கார் லோன்ஸில் கடனுதவி நடைமுறைகள் அனைத்தும் காகிதம் இல்லாமல் நடத்தப்பட உள்ளது. இ-கே.ஒய்.சி, வீடியோ கே.ஒய்.சி மற்றும் இருப்பிடத்தின் முகவரியை உறுதிப்படுத்தும் ஏதேனும் ஒரு ஆவணம் இருந்தாலே போதும், காருக்கான கடனுதவியை பெற்றுவிடலாம். இந்த ஆவணங்கள் சரிப்பார்ப்பு அனைத்தும் ரியல்-டைமில், அதாவது அந்தந்த நேரத்திலேயே நடத்தி முடிக்கப்படும்.

புதிய 'எக்ஸ்பிரஸ் கார் லோன்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் இந்தியாவிற்கான முதன்மை சில்லரை வர்த்தக அதிகாரி அர்விந்த் கபில் தலைமை தாங்கினர்.
அப்போது பேசிய ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா, "எங்களின் வாடிக்கையாளர்களுக்கான எண்ட்-டூ-எண்ட் கார் நிதியுதவிகள் வழங்குவதை மேம்படுத்துவதும் வகையில், எங்களின் ஸ்மார்ட் ஃபைனான்ஸ் தளத்தில் எச்.டி.எஃப்.சி வங்கியின் 'எக்ஸ்பிரஸ் கார் லோன்ஸ்' அம்சத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். 2020இல் ஸ்மார்ட் ஃபைனான்ஸ் தளத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கியுள்ளோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகி, எச்.டி.எஃப்.சி - தங்களது துறைகளில் கொடிக்கட்டி பறக்கும் இரு பெரும் நிறுவனங்களான இவை இரண்டும் அறிமுகப்படுத்துவதால் புதிய 'எக்ஸ்பிரஸ் கார் லோன்ஸ்' அம்சத்தில் நிச்சயமாக நம்பகத்தன்மை இருக்கும். இந்த புதிய கடனுதவி வசதியை கடன் வாங்க தகுதியுடையவர்கள் யவரொருவரும் பெறலாம். குறிப்பாக, எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த கடனுதவி அம்சம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









