டீசலை தொடர்ந்து பெட்ரோல் காரையும் முற்றிலுமாக நிறுத்தப்போகும் மாருதி! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்
மாருதி நிறுவனத்தின் பெட்ரோல் இன்ஜின் காரை வாங்கும் ஐடியாவில் இருக்கிறீர்களா? உங்களுக்கு இன்னும் ஏழு ஆண்டுகள் தான் டைம். வரும் 2030 ஆம் ஆண்டு க்குள் மாருதி நிறுவனம் தனது பெட்ரோல் இன்ஜின் கார்களை எல்லாம் நிறுத்திவிட்டு புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இதுதான் இருக்கிறது. தற்போது பெட்ரோல் இன்ஜன் கார்களை அதிகமாக விற்பனை செய்து வந்தாலும் இந்நிறுவனம் சிஎன்ஜி மற்றும் ஸ்டிராங் ஹைபிரிட் கார்களையும் தற்போது தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது பெட்ரோல் கார்களின் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது. பெட்ரோல் கார்களை நிறுத்துகிறது என்றால் இனி இவிகளை மட்டும் தான் மாருதி நிறுவனம் தயாரிக்குமா என்றால் இல்லை. மாருதி நிறுவனம் தனது தயாரிப்புகளில் சிஎன்ஜி ஸ்டிராங் ஹைபிரிட், பிளக்ஸ் ஃப்யூயல் மற்றும் கம்ப்ரஸ்டு பயோ கேஸ் ஆகிய எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதில் பிளக்ஸ் ஃப்யூயல், சிஎன்ஜி மற்றும் கம்ப்ரஸ்ட் பயோ கேஸ் ஆகியன கம்பேஷன் இன்ஜின் கொண்டு இயங்கும் வாகனங்கள் தான். ஆனால் மாருதி நிறுவனம் தற்போது முழுமையாக பெட்ரோல் கொண்டு இயங்கும் இன்ஜின்களை முழுமையாக நிறுத்திவிட்டு இப்படியான மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் இன்ஜின்களை மட்டுமே உருவாக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக மாருதி சுஸூகி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பிற்காக ரூபாய் 10,300 கோடியை ஒதுக்கியுள்ளது. அதில் ரூபாய் 7300 கோடி லித்தியம் அயான் செல் மற்றும் பேட்டரி பேக்குகளை தயாரிக்கும் ஆலையை கட்டமைக்கவும் ரூபாய் 3000 கோடி இவி வாகனங்களை தயாரிக்கும் ஆலையை கட்டமைக்கவும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.
மாருதி நிறுவனம் தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கார் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 60 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 550 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவனம் இந்த காரை அடிப்படையிலிருந்து ஒரு இவி காராக உருவாக்குகிறது. பல போட்டி நிறுவனங்கள் தங்கள் பெட்ரோல் இன்ஜின் காரை மாற்றி அமைத்து இவி காராக உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். மாருதி இதுவரை அந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மாருதி நிறுவனம் இந்த பெட்ரோல் காரை கைவிடும் முடிவை எடுத்ததற்கு முக்கியமான காரணம் மாசு உமிழ்வு தான். உலகம் முழுவதும் மாசு உமிழ்வு குறித்து எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இப்பொழுதே முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கி உள்ளனர். மாருதி நிறுவனமும் அதன் ஒரு பகுதியாக இதை கையில் எடுத்துள்ளது.
இது காரைப் பொறுத்தவரை காரின் மொத்த விலையில் 70 சதவீதம் இவி பேட்டரியின் விலையாக இருக்கிறது. ஆனால் இது தற்காலிக விலை ஏற்றம் தான். இந்தியாவில் கார்களுக்கான பேட்டரி தயாரிக்கப்படும் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால் பேட்டரியின் விலை வெகுவாக குறைந்து விடும். 2030-ம் ஆண்டிற்குள் இவி பேட்டரியின் விலை மிக மலிவாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் அதிகமான எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருப்பதால் இந்நிறுவனம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடியதாக இருக்கும். ஆட்டோமொபைல் துறையில் புரட்சி ஏற்பட்டு வருகிறது என்பது நமக்கு கண்கூடாக தெரிகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பெட்ரோல் கார்கள் என்ற ஒன்றை நாம் இனி மியூசியத்தில் தான் பார்க்க வேண்டும் போல.


Click it and Unblock the Notifications









