பெட்ரோல் செலவே தேவையில்லை! சென்னை-கொடைக்கானல் சிங்கிள் சார்ஜ்ல போகலாம்! மாருதியின் முதல் இவி இதான்!
மாருதி சுஸூகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான டிவிஎஸ் என்ற எலெக்ட்ரிக் காரின் சில முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு இந்த மாதம் ஜப்பான் நாட்டில் நடக்கப் போகும் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் குறித்து தற்போது வெளியாகி உள்ள சில முக்கியமான தகவல்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரை முதன்முறையாக காட்சிப்படுத்தியது. இந்த கார் தான் மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த கார் குறித்த சில முக்கியமான தகவல்களை தற்போது சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த இவிஎக்ஸ் காரை முழுமையாக வடிவமைத்தது சுஸூகி நிறுவனம் தான் இதை சர்வதேச அளவில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த மாத இறுதியில் ஜப்பானில் ஆட்டோ ஷோ ஒன்று நடக்க உள்ளது. அங்கு சுஸூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் காரையும் நான்காம் தலைமுறை ஷிப்ட் காரையும் காட்சிப்படுத்தப் போவதாக தெரியவந்துள்ளது.
அதன்படி தற்போது சுஸூகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4,300 மீமி நீளமும் 1800 மிமீ அகலமும் 1600 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட காரிலிருந்து இது சில ஸ்டைலிங் அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
இந்த காரில் லைட்டிங் எல்லாம் எல்இடி லைட் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. சுஸூகி லோகோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட காரிலிருந்து சற்று மேலே தள்ளி இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் ஆட்டோ ஷோவின் போது இந்த காரின் உட்புற வசதிகள் எல்லாம் காட்சிப்படுத்தப்படும் என சுஸூகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் டூயல் ஸ்கிரீன் செட்டப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஃப்ளாட் பாட்டம் ஸ்போர்ட்டியான ஸ்டேயரிங் வீல், வட்டமான டயல் மற்றும் டச் பேனல் ஆகியன இந்த கேபின் உள்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் இந்த காரில் 60 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. இருந்தாலும் இந்த செல் கெமிஸ்ட்ரி குறித்த தகவல் எதையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்நிறுவனம் ஏற்கனவே இந்த கார் 550 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என தெரிவித்திருந்தது.
ஜப்பானிலும் இந்த கார் முழு சார்ஜில் 500 கிலோ மீட்டர் ரேஞ்சாவது குறைந்தபட்சம் தரும் என சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் அறிமுகப்படுத்தப்படும் இந்த காரும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் காரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகன உலகில் தற்போது டாடா நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரும்பாலான கார்கள் தட்டான் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் தான் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் டீசல் கார்களில் மாருதி நிறுவனம் அதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அந்நிறுவனம் இதுவரை தனது காலடி தடம் கூட எடுத்து வைக்கவில்லை.
எலெக்ட்ரிக் கார்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என அந்நிறுவனத்தின் தலைவர்கள் இதற்கு முன்பு ஊடகத்திடம் பேசிய நிகழ்வுகளை வைத்து நம்மால் கணிக்க முடிகிறது. இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனம் உலகில் தனது காலடித்தடம் இல்லை என்றால் அது அந்நிறுவனத்திற்கு கெட்ட பெயரை கொண்டு வரும் என்பதற்காக மிக மெதுவாக தான் இந்த எலெக்ட்ரிக் வாகன நகர்வை மாருதி நிறுவனம் செய்து வருகிறது.
மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தை விட மாற்று எரிசக்தியான ஹைட்ரஜன் ஃப்யூயல் செல், ஹைபிரிட் போன்ற வாகனங்களை தான் அதிகம் விரும்புகிறது. இதற்காக தான் மாருதி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது. டொயோட்டாவிடம் உள்ள ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தற்போது மாருதி நிறுவனம் தனது கார்களின் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் அது மக்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை ஏற்படும் ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை மேலும் அதிகமாகும். எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மக்கள் நம்பிக்கை அதிகமாகும். இந்த இவிஎக்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்து பெரும் புரட்சியை ஏற்படுத்துகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








