ஒரு காலத்துல இந்த காரை வாங்க மக்கள் க்யூல நின்னாங்க! இப்ப விற்பனை டல் ஆகிடுச்சு! சீக்கிரம் காலியாகிடும் போல
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த பட்டியல் வெளியானது. இதில் பெரிய அளவில் மாற்றமில்லை எதிர்பார்த்த அதே பட்டியல் தான் வெளியாகியுள்ளது. ஆனால் இதன் விற்பனை எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் உள்ள டாப் 10 பட்டியலில் 10ல் 7 இடங்களை மாருதி நிறுவனம் தான் பிடித்துள்ளது.
இந்த 7ல் மாருதி கார்களில் 5 மாருதி கார்களின் விற்பனை கடந்தாண்டு ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளது. ஆனால் 2 கார்களின் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. விற்பனை சரிவைச் சந்தித்தாலும் அந்த கார்கள் டாப் 10 பட்டியலில் தான் இருக்கிறது. அந்த இரண்டு கார்கள் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் தான்.

டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே செடான் கார் மாருதி டிசையர் கார் தான். சமீப காலமாக செடான் கார் செக்மெண்ட்டிலேயே கார் விற்பனை குறைந்துவிட்டது. மக்கள் எல்லோரும் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்புவதால் அந்த செக்மெண்டில் விற்பனை வேகமாக அதிகரித்ததன் எதிரொலியாக செடான் செக்மெண்டில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. என்னதான் செடான் காரில் விற்பனை சரிவு வந்தாலும் டிசையர் காரின் விற்பனை சீராகவே இருந்தது.
ஆனால் சமீப காலமாக அந்த காரின் விற்பனை படிப்படியாகச் சரிவை நோக்கிச் சென்று வருகிறது. 2023ம் ஆண்டு ஜனவரியில் 10 ஆயிரம் விற்பனையைத் தாண்டிய கார்களில் டிசையர் கார் இருந்தாலும் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாத விற்பனையை ஒப்பிடும் போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 11,317 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் மொத்தம் 14,967 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 24 சதவீத விற்பனை சரிவாகும்.
இவ்வளவு விற்பனை சரிவு ஏற்பட்டாலும் டிசையர் கார் இன்னும் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில்தான் இருக்கிறது. நாட்கள் ஆக ஆக மக்களுக்கு டிசையர் கார் மீது மவுசு குறைவது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும் தற்போது வரை இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் செடான் காராக மாருதி டிசையர் கார் தான். இருக்கிறது.
மாருதி டிசையர் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜின் கிட் உடன் விற்பனைக்கு வருகிறது. இது பெட்ரோல் வெர்ஷனில் 90 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், சிஎன்ஜின வெர்ஷனில் 77 பிஎஸ் பவரையு், 98.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றம் 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியன்ட் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோலில் இயங்கும் போது 24.12 கி.மீ மைலேஜையும் சிஎன்ஜின வெர்ஷனில் 31.12 கி.மீ மைலேஜையும் வாரி வழங்குகிறது.
இந்த காரின் விலையைப் பொருத்தவரை எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ6.24 லட்சம் முதல் ரூ9.18 லட்சம் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. மாருதி டிசையர் கார் தன் ஆயுளை இழக்க ஆரம்பித்துவிட்டது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் இந்த காரின் ரசிகராக இருந்தால் இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








