40 கி.மீ மைலேஜ் தரும் மாருதி காரின் ரிலீஸ் தேதி வெளியானது! இவ்வளவு சீக்கிரமாவே வரப்போகுதா?
புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் (Maruti Swift) கார் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பலர் நீண்ட நாட்களாக இந்த காரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். பல்வேறு அப்டேட்களுடன் புதிதாக பரிணாம வளர்ச்சி பெற்று அறிமுகம் ஆகப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுஸூகி நிறுவனம் கடந்த மாதம் ஜப்பான் டோக்கியோவில் நடந்த மோட்டார் ஷோவில் தனது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை முதன் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் கிட்டத்தட்ட புரொடெக்ஷனுக்கு தயாரான காராகவே இருந்தது. இந்த கார் குறித்த பல்வேறு தகவல்கள் எல்லாம் அப்பொழுது வெளியாகின. மக்கள் மத்தியில் இந்த கார் நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது அறிமுகமாகியுள்ளதால் பலர் இந்த கார் குறித்து அதிக ஆர்வமாக தேடிப் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் இந்த கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு அதற்கான சோதனைகள் எல்லாம் துவங்கியது. இந்தியாவில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் சோதனை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை நம்மால் காண முடிந்தது. தற்போது மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை தீவிரமாக டெஸ்ட் செய்து வருகிறது. இந்த கார் சர்வதேச அரங்கில் 2024-ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது இந்த கார் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி நிறுவனம் ரெகுலர் ஸ்விஃப்ட் கார் போக தனியாக ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் (Swift Sports) என்ற புதிய வேரியன்ட் காரையும் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் காராக இருக்கும் எனவும், இந்தியாவை மையப்படுத்திய இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கார் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜப்பானில் உள்ள ஊடக தகவல்களின்படி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் 2024-ம் ஆண்டு மத்தியில் அதாவது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அடுத்த நிதியாண்டு பிறந்தவுடன் மாருதி நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
மாருதி நிறுவனம் இந்த ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரை மற்ற காரை விட அதிக அக்ரஸிவான ஸ்டைலிங் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு ஸ்போர்டியர் லுக்கில் இருக்கும்படி இந்த காரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஸ்விஃப்ட் கார் தயாராக்கும் அதே ஹார்ட்டெக்ட் பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் இன்ஜினை பொருத்தவரை மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது. இதில் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதே இன்ஜின் தான் தற்போது உள்ள மாடலிலும் இருக்கிறது. அதே இன்ஜினை புதிய தலைமுறை காரிலும் அப்படியெ பொருத்துகிறது.
இந்த இன்ஜினுடன் சேர்த்து புதிய 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து இந்த காருக்கு 140 பிஎச்பி பவரையும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய காரில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் இருந்தாலும் இந்த இன்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் லோ டார்க் அம்சங்கள் கொண்டு அதிக மைலேஜ் தரும் காராக இந்த கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
அதன் எடை ரெகுலர் காரை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் கொண்டு வருவதற்காக இப்படியான மாற்றத்தை சுஸூகி நிறுவனம் செய்துள்ளது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரும் நல்ல மைலேஜ் தரும் காராகவே மார்க்கெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஸ்விஃப்ட் ஸ்டிராங்க் ஹைபிரிட் வெர்ஷன் கார்தான்.
இந்த கார் தான் லிட்டருக்கு 40கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் காராக உருவாக்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள பைக்குகளுக்கு போட்டியாக இந்த கார்கள் எல்லாம் மைலேஜ் தரும் என்பதால் இந்த கார்கள் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. அதேநேரம் ஸ்ட்ராங் ஹைபிரிட் கார் என்பதால் இந்த காரின் விலையும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல்,மே மாதத்தில் இது குறித்த விரிவான விபரங்கள் எல்லாம் நமக்கு தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் மார்க்கெட்டிற்கு வரும்போது நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை ஆட்டோமொபைல் உலகில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மைலேஜ் விஷயத்தில் ஹைபிரிட் டெக்னாலஜி மூலம் இந்த கார் மக்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவுள்ளது.


Click it and Unblock the Notifications









