டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!

மாருதி சுஸுகி நிறுவனம் பெரிய குடும்பங்களைக் கொண்டவர்களுக்கு ஏற்ற வாகனமாக இரு புதுமுக 7 சீட்டர் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார்கள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகம். இதற்கு மிக சிறந்த உதாரணமாக மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700, மாருதியின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார் மாடல்கள் உள்ளன. அதிக இருக்கைகள் கொண்ட கார் பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனமே பெரும் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது. இதனை மேலும் வலுவாக்கும் முயற்சியிலேயே தற்போது அந்நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

7 சீட்டர்

7 இருக்கை வசதி

இதன் அடிப்படையில் இரு புதிய அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு புதிய கார் மாடல்களும் 7 இருக்கைகள் வசதி கொண்டதாக விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த கார்களை உற்பத்தி செய்யும் பணியில் மாருதி சுஸுகி தற்போது தீவிரமாகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்யூவி ரகத்தில் ஒன்று

மாருதி சுஸுகியின் இரு புதிய 7 இருக்கைகள் கார்களில் ஒன்று எஸ்யூவி ரகத்திலும், மற்றொன்று எம்பிவி ரகத்திலும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்று கிராண்ட் விட்டாராவை தழுவிய எஸ்யூவி ரக காராக உருவாக்கப்பட உள்ளது. இது வெறும் கிராண்ட் விட்டாராவை தழுவிய வாகனமாக மட்டுமே இருக்கப் போவதில்லை. புதுமுக 7 சீட்டர் காரில் கிராண்ட் விட்டாராவில் இடம் பெற்றிருக்கும் பன்முக சிறப்பம்சங்கள் இடம் பெற உள்ளன.

7 சீட்டர்

பெரிய சன்ரூஃப் கொடுக்க போறாங்க

அந்தவகையில், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் அதில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி போன்ற ஸ்பெஷல் அம்சங்களும் புதுமுக 7 சீட்டர் காரில் வழங்கப்பட இருக்கின்றது.

குளோபல் சி பிளாட்பாரம்

ஆகையால், நவீன கால அம்சங்கள் பல கொண்டதாகவே இந்த புதுமுகங்கள் இருக்கும். இதற்காக நிறுவனம் அதன் குளோபள் சி பிளாட்பாரத்தை பயன்படுத்த இருக்கின்றது. இதைத் தழுவியே தனது இரு புதுமுக கார்களையும் மாருதி சுஸுகி வடிவமைக்க இருக்கின்றது. இந்த பிளாட்பாரம், புதிய வாகனங்களை நவீன மற்றும் அதிக உறுதியானதாக உருவாக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய கார்களாக உருவாக்குவதற்கு ஏற்பவும் இந்த தளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

7 சீட்டர்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ரீபேட்ஜ்

இரண்டாவது 7 சீட்டர் எம்பிவி ரக காராக உருவாக்கப்பட்டு வருகின்றது. அது, டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும். இதை தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகியின் சில தயாரிப்புகளை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்குவதைப் போல் மாருதியும் டொயோட்டாவின் பிரபல கார் மாடலான இன்னோவாவை ரீபேட்ஜ் செய்ய இருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸிஸ் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் 4 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆகிய இரு எஞ்ஜின் தேர்வுகளே மாருதியின் புதுமுக எம்பிவி காரிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. ஏன், இன்னும் புதுமுக கார்களின் பெயர்களைக் கூட நிறுவனம் அறிவிக்கவில்லை.

போட்டி பெருசு

விரைவில் கார்களின் பெயர்கள் மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய முக்கிய விபரங்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் புதிய கார்கள் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அவை மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாயின் அல்கஸார் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஹரியானாவில் உள்ள கார்கோடா உற்பத்தி ஆலையில் வைத்தே மாருதி சுஸுகி அதன் இரு புதுமுக 7 சீட்டர் கார்களையும் உருவாக்க இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Maruti to be launch 2 seven seater cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X