மாருதி வேகன் ஆர் இவ்ளோ மைலேஜ் குடுக்குதா! டூவீலர்களே தோத்து போயிரும்! அதான் ஷோரூம்ல கூட்டம் முண்டியடிக்குது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி வேகன் ஆர் (Maruti Wagon R). மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரை, கடந்த 1999ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அன்றில் இருந்து இன்று வரை வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த காராக மாருதி வேகன் ஆர் திகழ்கிறது.

மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கடந்து விட்டன. இடைப்பட்ட காலத்தில் சுமார் 3 மில்லியன், அதாவது 30 லட்சம் வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையின் மிகவும் வெற்றிகரமான மற்றும் வரலாற்றில் என்றும் அழியாத தனி சிறப்பு மிக்க கார்களில் ஒன்றாக மாருதி வேகன் ஆர் பெயர் எடுத்துள்ளது.

மாருதி வேகன் ஆர் இவ்ளோ மைலேஜ் குடுக்குதா! டூவீலர்களே தோத்து போயிரும்! அதான் ஷோரூம்ல கூட்டம் முண்டியடிக்குது!

இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது மூன்றாவது தலைமுறை வேகன் ஆர் ஆகும். மாருதி வேகன் ஆர் காரில், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 1.2 லிட்டர் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 24.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

மாருதி வேகன் ஆர் கார் இதைக்காட்டிலும் அதிக மைலேஜை வழங்க கூடிய சிஎன்ஜி (CNG) வெர்ஷனிலும் கிடைக்கிறது. மாருதி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடலில் பொருத்தப்பட்டிருப்பது, 1.0 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த மாடல் ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பெட்ரோல் அல்லது சிஎன்ஜி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

மாருதி வேகன் ஆர் இவ்ளோ மைலேஜ் குடுக்குதா! டூவீலர்களே தோத்து போயிரும்! அதான் ஷோரூம்ல கூட்டம் முண்டியடிக்குது!

வசதிகளுக்கும் கொஞ்சம் கூட பஞ்சமில்லை!

மாருதி வேகன் ஆர் காரில், 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 4 ஸ்பீக்கர்கள், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டியரிங் வீல் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விலை இவ்ளோதானா!

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.47 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் 7.20 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிறப்பான மைலேஜ், அட்டகாசமான வசதிகள் மற்றும் ஓரளவிற்கு குறைவான விலை ஆகிய காரணங்களால், மாருதி வேகன் ஆர் பிரம்மாண்டமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சேல்ஸ் வேற வேற வேற லெவல்!

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 2,21,850 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் (Most Sold Car) என்ற பெருமையை மாருதி வேகன் ஆர் பெற்றுள்ளது. அத்துடன் இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த ஒரே காரும் மாருதி வேகன் ஆர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவும் முக்கியமான காரணங்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடல் பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்டிருந்ததும், வருடத்தின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டதும் கூட, 2022ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை மாருதி வேகன் ஆர் பெறுவதற்கு முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 7, 2023, 23:40 [IST]
English summary
Maruti wagon r most sold car india 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+