Maserati MC20 launched: ரூ 4 கோடி கொடுத்து இந்த காரை நீங்க வாங்குவீங்களா? அப்படி என்ன இருக்குது இந்த கார்ல?
மசரட்டி நிறுவனம் தனது எம்சி 20 சூப்பர் காரை கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரை இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ3.69 கோடி என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. ஆனால் இந்த விலை வாடிக்கையாளர் ஆப்மஸராட்டிஷனை தேர்வு செய்வதற்கு முன்பான விலைதான் ஆப்ஷனை பொருத்து விலை மாறுபடும்.
இந்த எம்சி 20 கார் அந்நிறுவனத்தின் எம்சி12 காரின் வெற்றிக்கு பிறகான வரும் அதே ரக காராகும். எம்சி 12 என்பது ஃபெராரி என்சோ காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த எம்சி 20 கார் முற்றிலும் புதுமையான காராகும். இந்த காரில் இன்ஜின் மிட் மவுண்டட் இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் எஃப்1 கார்களின் பேட்டன்ட் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என மசரட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் மொத்தம் 630 எச்பி பவரையும் 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் மட்டும் தான் விற்பனைக்கு வருகிறது. மஸராட்டி நிறுவனம் இந்த இன்ஜினை நியூடினோ என அழைக்கிறது. இந்த காரிலல் டிரைவர் 4 விதமான டிரைவிங் மோட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மஸராட்டி எம்சி20 காரின் பெர்ஃபாமென்ஸை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.9 நொடியில் பிக்கப் செய்து கொள்ளும் திறன் கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக 325 கி.மீ வேகத்தில் சீறிபாயும். இதுமட்டுமல்ல இந்த எம்சி20 கார் 100 கி.மீ வேகத்தில் செல்லும் போது பிரேக் பிடித்தாலும் 33 மீட்டரில் 0 கி.மீ வேகத்திற்கு வந்து கார் நின்று விடும்.
மஸராட்டி நிறுவனம் இந்த எம்சி20 காரை வடிவமைக்கும் போது அதிகமாக கார்பன் ஃபைபர் பொருட்களைக் கொண்டே வடிவமைத்துள்ளனர். இதற்கு எடை குறைப்பு தான் முக்கியமான காரணம். இந்த கார் மொத்தம் 1500 கிலோ எடை கொண்டது. அதில் 59 சதவீதம் காரின் பின்பகுதியிலும் 41 சதவீதம் காரின் முன்பகுதியிலும் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சேஸிஸை பொருத்தவரை மேனோக்யூ டைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் 100 கிலோ எடையில் தான் இருக்கிறது. இது தான் இந்த கார் மிகக் குறைவான எடையில் உருவாக முக்கியமான காரணம். இந்த காரின் வெளிப்புறத்தோன்றம் கிளீனாகவும் மினிமலாகவும் இருக்கிறது. எம்சி12 காரிலிருந்து சில முக்கியமான விஷயங்கள் இதன் வடிவமைப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் வடிவமைப்பில் காருக்கு பெரிய விங் மற்றும் ஸ்பிளிட்டர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க்க ஒ எலெகெண்ட் லுக்கில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த கார் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் உடன் மிகச்சரியாக ஏர்ஃப்ளோ இருக்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








