இப்படி ஒரு பைக்கை தான் டெலிவரி பாய்ஸ் எதிர்பார்த்தாங்க! கொஞ்ச நாள்ல ரோடு ஃபுல்லா இதான் இருக்கும் போல!

மேட்டர் நிறுவனம் நேற்று ஆட்டோ எக்ஸ்போவில் தனது 2 கான்செப்ட் இவி மற்றும் ஹோம் டாக் இன்வென்ட்ர் மற்றும் ஸ்வாப்.மீ என்ற பேட்டரி ஸ்வாப்பிங் எக்கோ சிஸ்டம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நொய்டா பகுதியில் தற்போது ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று(11ம் தேதி) ஏராளமான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களை வரிசையாக காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களில் தனித்துவம் மற்றும் ஸ்பொலிட்டிகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த ஆட்டோ எக்ஸ்போவில் மேட்டர் நிறுவனமும் தனது 2 கான்செப்ட் இவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு பைக்கை தான் டெலிவரி பாய்ஸ் எதிர்பார்த்தாங்க! கொஞ்ச நாள்ல ரோடு ஃபுல்லா இதான் இருக்கும் போல!

அதன்படி இந்நிறுவனம் தனது இஎக்ஸ்இ மற்றும் யூடி ஆகிய தங்களது கான்செப்ட் வாகனங்களை அறிமுகப்படுத்தினர். இதில் இஎக்ஸ் பைக் ஒரு எக்ஸிக்யூட்விட் செக்மெண்ட் பைக்காகும். யூடி ஆன்-தி-கோ புதிய யூட்டிலிட்டி பைக்காகும். இது போக மேட்டர் நிறுவனம் ஹோம் டாக் இன்வென்டர் மற்றும் ஸ்வாப். மீ என்ற அந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்வாப்பிங் எக்கோ சிஸ்டமாகும்.

மேட்டர் கான்செப்ட் இஎக்ஸ்இ வாகனத்தை பொருத்தவரை ஸ்வாப் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மேனுவல் கியர் வாகனமாகும். இந்த பைக் ரைடருக்கு அத்தனை கண்ட்ரோலும் இருக்கும் வகையான பைக்காகும். இந்த பைக்கை மேட்டர் நிறுவனம் குறைந்த செலவில் உருவாக்கியுள்ளது. இந்த பைக் டெலிவரியில் பணியாற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும்வ விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்த விலை அதிக பயன்பாடு என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பைக்கை தான் டெலிவரி பாய்ஸ் எதிர்பார்த்தாங்க! கொஞ்ச நாள்ல ரோடு ஃபுல்லா இதான் இருக்கும் போல!

இது போக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஹோம் டாக் இன்வென்டர் என்பது வீட்டில் வைத்து இந்த பைக்கை சார்ஜ் ஏற்றவோ அல்லது வீட்டின் பயன்பாட்டிற்கோ பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிறுவனம் தனது பேட்டரி ஸ்வாப்பின் தொழிற்நுட்பத்தில் லித்தியம் அயான் பேட்டரியை பயன்படுத்தியுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தில் மூலம் ஹோம் டாக் இன்வென்டர் மற்றும் பைக்கின் பேட்டரியை இன்டர் சேஞ்ச்செய்து கொள்ள முடியும். இது போக இந்நிறுவனம் தனது டூவீலர் மற்றும் 3 வீலர்களுக்கான பேட்டரி ஸ்வாப்பிங் எக்கோ சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ மோஹல் லால்பாய் கூறும் போது : "நாங்கள் எப்பொழுதும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, டெக்னாலஜி-டிரைவன் தயாரிப்புகளை வழங்குகிறது. இது மொபிலிட்டி மற்றும் எனர்ஜி செக்மெண்டில் புதிய தயாரிப்புகளை கொண்டு வருகிறது. இதன் மூலம் பைக்குகளின் அனைத்து செக்மெண்ட்களில் தயாரிப்புகளை உருவாக்க முடியும்." என கூறினார்.

இப்படி ஒரு பைக்கை தான் டெலிவரி பாய்ஸ் எதிர்பார்த்தாங்க! கொஞ்ச நாள்ல ரோடு ஃபுல்லா இதான் இருக்கும் போல!

ஆமதாபாத்தை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் கியர் பைக்கை உருவாக்கியது. இந்நிறுவனம் தனது பைக்கில் 6 கிலோவாட் ஹவர் பேட்டரியை பயன்படுத்தியுள்ளது. இந்த பைக் சிறப்பான ரேஞ்ச், மற்றம் அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.இந்த பைக்கை விரைவில் இந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இந்த பைக்கில் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 9:27 [IST]
English summary
Matter showcased two concept evs in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+