கார்களின் உசேன் போல்ட் இது தான்! என்ன ஸ்பீடு தெரியுமா? சும்மா பிச்சுக்கிட்டு போகும்!
மெக்லாரன் நிறுவனத்தின் 720எஸ் கார் மிகவும் பிரபலம் இதற்கு அடுத்த தலைமுறை காராக அந்நிறுவனம் தற்போது 750எஸ் என்ற சூப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மெக்லாரன் நிறுவனம் அதிவேக கார்களை தயாரிப்பதில் சிறந்த நிறுவனம். இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பான கார்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் மெக்லாரன் நிறுவனம் தனது 720எஸ் காரை அப்டேட் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது 750 எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் கூபே மற்றும் ஹார்டு டாப் கன்வெர்டபிள் ஸ்டைல் காராக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் பழைய 720எஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும் 30 சதவீதம் அதிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 4.0 லிட்டர் வி8 இன்ஜினை கொண்டது. இந்த கார் பார்க்க வழக்கமான மெக்லாரன் காரன் பாடி லுக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 730 எச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு சீக்கொன்ஸியல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ஷாட்டர் ஃபைனல் டிரைவ் ரேஸியோவில் இயங்கும் திறன் கொண்டது. இந்த கியர் பாக்ஸ் பின்பக்க வீல் டிரைவ் உடன் இணைக்கக்கூடியது.

இந்த மெக்லாரன் 750எஸ் கூபே மற்றும் ஸ்பைடர் ஆகிய கார்களின் ஃபெர்பாமென்ஸை பொருத்தவரை 0-96கி.மீ வேகத்தை வெறும் 2.7 நொடியில் பிக்கப் செய்யும் அளவிற்குத் திறன் கொண்டது. அதனால் 200 கி.மீ வேகம் செல்லும் போது 2 விதமான செய்யப்படுகிறது. கன்வெர்டபிளை ஓப்பன் செய்து வைத்தால் 200 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்க 7.3 நொடிகளும், கூபேவாக இருக்கும் போது 7.2 நொடிகளும் எடுத்துக்கொள்கிறது.
அதே நேரத்தில் 300 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்கும் போது இரண்டிற்கும் இடையே 0.6 நொடிகள் வித்தியாசப்படுகிறது. ஒப்பன் ஆகியிருக்கும் போது 20.4 நொடிகளும், கூபே ஸ்டைலில் இருக்கும் போது 19.8 நொடிகளும் எடுத்துக்கொள்கிறது. இரண்டு வேரியன்ட்களும் அதிகபட்சம் 331 கி.மீ வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டது.

இதே கார் ஓப்பனில் இருக்கும் போது 400 மீட்டர் மார்க்கை கடக்க 10.3 நொடியை எடுத்துக்கொள்கிறது. இதுவே கூபே ஸ்டைலில் இருந்தால் 10.3 நொடிகளை எடுத்துக்கொள்கிறது. இந்த மெக்லாரன் 750எஸ் காரில் முன்பக்கம் பழைய 720எஸ் மாடலை விட 6 மிமீ நீளம் அதிகமாகியுள்ளது. மேலும் புதிய சஸ்பென்சன் செட்டப் செய்யப்பட்டுள்ளது.
இந்த சூப்பர்காரில் மெக்லாரன் நிறுவனத்தின் புதிய தலைமுறை ப்ரோ ஆக்டிவ் சேஸிஸ் கண்ட்ரோல் 3 தொழிற்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கம் 3 சதவீதம் சாஃப்டர் ஸ்பிரிங்ஸ் மற்றும் பின்பக்கம் 4 சதவீதம் ஃப்ரீம்மர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வெஹிகில் லிஃப்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கம் 4 நொடிகளில் லிஃப்ட் ஆகிவிடுகிறது. 720எஸ் காரில் 10 நொடிகள் வரை ஆகும்.
இந்த 750 எஸ் கார் பழைய 720 எஸ் காரை விட ஷார்ப்பான ஸ்டைலிங் உடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த 750 எஸ் காரில் புதிய பம்பர், ஏர் சேனலிங்கிற்காக ஐ சாக்கெட்கள் ரீஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது. ஏரோ டைனமிக்ஸ் பேலன்ஸிற்காக புதிய முன்பக்க ஸ்பிலிட்டர்கள் உள்ளன. பின்பக்கம் 20 சதவீதம் பெரிய வீங் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் பி1 காரை போன்ற எக்ஸாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக பின்பக்க வீலில் புதிய இன்டேக், புதிய பின்பக்க பம்பர் மற்றும் புதிய மெஷ் கிரில் மற்றும் புதிய டெக் ஆகிய ஸ்டைலிங் அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இந்த கார் மெக்லாரன் போன்ற சூப்பர் கார் ரசிகர்கள் பெரிதும எதிர்பார்த்த கார் இந்த கார் தற்போது அறிமுகமாகியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை 3.24 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ2.65 கோடி ) என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூப்பர் கார் ரசிகர்கள் மத்தியில் மெக்லாரன் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இந்த வகையில் இப்படி ஒரு கார் வெளியாகியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த காரை இந்தியர்கள் யாராவது வாங்குவார்களா என்பது தான் இந்திய சூப்பர் கார் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!


Click it and Unblock the Notifications









