எந்த மெக்லாரன் கார் ஓனரும் இப்படி செய்யமாட்டாங்க.. ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா!!
சூப்பர் கார்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. நேத்து பொறந்த குழந்தையா இருந்தாலும் சூப்பர் கார் ரோடுல போகும்போது அதை திரும்பி பார்க்க நினைக்கும். அந்த அளவிற்கு மிகவும் அழகான மற்றும் அதிக வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்ட காரே சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் ஆகும்.
சாலையில் இந்த வாகனங்கள் பயணிக்கும்போது அவற்றில் இருந்து வரும் ஒலி கை குழந்தையை மட்டுமல்ல வயது முதிந்த நபர்களைக்கூட திரும்பி பார்க்க செய்யும். அந்த அளவிற்கு கவரக் கூடிய வகையிலான ஒலியையே சூப்பர் கார்கள் வெளியேற்றும். இத்தகைய ஓர் காரையே வெறிக்க வெறிக்க வேடிக்கைப் பார்த்ததன் காரணத்தினால் ஓர் நபருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் அடித்திருக்கின்றது.

அதாவது அந்த காருக்கு மிக அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பே அவருக்கு கிடைத்து இருக்கின்றது. நம்ம ஊருல அஜித், விஜய், ஏன் சூப்பர் ரஜினிகூட நின்றுகூட ஃபோட்டோ எடுத்துவிட முடியும். ஆனால், ஓர் சூப்பர் காருடன் சேர்ந்து ஃபோட்டோ எடுப்பது என்பது இயலாத ஒன்று.
அவற்றை சாலையில் பார்ப்பதே பெரிய விஷயம். சூழல் இப்படியாக இருக்க அவற்றிற்கு அருகில் நின்று ஓர் நபர் ஃபோட்டோ பிடிப்பது என்பது சாத்தியம் அற்றது ஆகும். ஆனால், இந்த வாய்ப்பு ஓர் நபருக்கு அந்த காரின் உரிமையாளரின் அனுமதியுடன் கிடைத்து இருக்கின்றது.

மெக்லாரன் காருடன் சாலையோரத்தில் அதன் உரிமையாளர் நின்றுக் கொண்டிருந்திருக்கின்றார். அந்தவேளையில், அவ்வழியே வந்த சாமானியர் ஒருவர் அக்காரை, குழந்தை போல் நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றார். அத்துடன், தன்னுடைய செல்போனில் அவர் படமும் எடுக்கத் தொடங்கி இருக்கின்றார்.
இந்த நிலையில் காரை விட்டு வெளியே வந்த அதன் உரிமையாளர், தன்னுடைய மெக்லாரன் காரை புகைப்படம் எடுக்க அனுமதித்து இருக்கின்றார். அத்துடன், எளிமையானவரின் செல்போனை கையில் வாங்கிய அந்த கோடீஸ்வரர், அவரை காருக்கு அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தும் தந்திருக்கின்றார்.

கோடீஸ்வரரின் இந்த செயலே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பொதுவாக, சில சூப்பர் கார் உரிமையாளர்கள் தங்களின் காருக்கு அருகில் பிறர் நிற்பதையே கௌரவ குறைச்சலாக நினைப்பார்கள். இதுமட்டுமில்லைங்க, காரை எங்கு ஸ்கிராட்ச் செய்து விடுவார்களோ அல்லது சொட்டையாக்கிவிடுவார்கள் என்றும் அஞ்சுவர்.
இதனாலேயே பெரும்பாலானோர் தங்களின் ஆடம்பர கார்களில் வேறும் யாரும் கையாள அனுமதிப்பதில்லை. ஏன், அருகில் நிற்பதைகூட அவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த மாதிரியான சூழலிலேயே மற்ற சூப்பர் கார் உரிமையாளர்களிடம் இருந்து இந்த நபர் மாறுபட்டு இருக்கின்றார். எனவேதான் இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது.
மெக்லாரன் சூப்பர் காரின் உரிமையாளர் ஆமிர் ஷர்மா என்பது தெரிய வந்திருக்கின்றது. இவர் இன்டீரியர் டிசைனர் ஆவார். இந்த தொழிலில் தலைசிறந்த நபர் என்பதற்கான விருது இவருக்க வழங்கப்பட்டு இருக்கின்றது. அது மெக்லாரன் 720எஸ் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த சூப்பர் காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 720 பிஎஸ் மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த சூப்பர் காரால் மணிக்கு 341 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். மேலும், வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர்கள் பலரின் கனவு வாகனமாக மெக்லாரன் சூப்பர் கார்கள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இதனாலேயே பலரின் எட்டாக் கனியாக மெக்லாரன் சூப்பர்கள் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அக்காருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஒரு நபருக்கு கிடைத்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









