இந்த வீடியோவுல செய்றது மாதிரி நீங்க ட்ரை பண்ணி பாக்காதீங்க! அப்புறம் போலீஸ்கிட்ட அடி வாங்கனும்!
டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர்கள் சிலர் ரயிலின் கதவை அடக்க விடாமல் காலால் தடுத்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இவ்வாறாக செயல்படும் பயணிகள் மீது புகார் அளிக்க உதவி எண்ணை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் பெருநகரங்களில் தற்போது மெட்ரோ பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயிலில் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கதவுகள் ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்ற பிறகு தான் திறக்கும். அதேநேரம் இந்த கதவுகள் எல்லாம் அடைத்த பின்பு தான் ரயில் கிளம்பிச் செல்லும்.

மெட்ரோ ரயில் பயணித்த பலருக்கும் இந்த தொழில்நுட்பம் நிச்சயம் தெரிந்திருக்கும். இந்நிலையில் டெல்லி மெட்ரோவில் பயணித்த சேட்டைக்கார இளைஞர்கள் சிலர் மெட்ரோ ரயிலின் கதவை அடைக்க விடாமல் தடுத்து விளையாடி உள்ளனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் மெட்ரோ ரயிலின் கதவுகள் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது ரயிலின் கதவு அடைக்க முற்படும்போது இவர்கள் காலை குறுக்கே நீட்டி கதவை அடக்கி விடாமல் தடுக்கின்றனர். மெட்ரோ ரயிலில் உள்ள தானியங்கிக் கதவுகள் இப்படியாக ஏதாவது தடுப்புகள் அடைக்க விடாமல் தடுத்தால் கதவுகள் உடனடியாக திறந்து விடும்.
இப்படியாக அந்த வீடியோவில் இளைஞர்கள் தங்கள் கால்களை வைத்து கதவை அடைக்க விடாமல் தடுத்தனர். அதை அருகிலிருந்த அவர்களது நண்பர்கள் தங்கள் செல் ஃபோனில் வீடியோ எடுத்தனர். இந்த இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்து அதில் டெல்லி மெட்ரோ நிர்வாகத்தின் டிவிட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த டெல்லி மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்ட மெட்ரோ ரயில் கோச் நம்பரைக் கேட்டிருந்தது. மேலும் இவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மெட்ரோ ரயிலில் ஏதாவது இளைஞர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அது குறித்த தகவல்களை 155370 என்ற உதவி எண்ணில் அழைத்துத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த வீடியோ ஆன்லைனில் முதன்முறையாகக் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தெரிகிறது. அதைப் பதிவேற்றிய நபருக்கும் இந்த சம்பவத்தை ஈடுபட்ட நபர்களுக்கும் இடையே தொடர்பு இருக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது இந்த வீடியோவில் உள்ள இளைஞர்கள் பிடிபட்டால். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெட்ரோ சேவை என்பது மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகவும் தடையில்லாமலும் செல்ல உதவியாக இருக்கும் ஒரு மிக அற்புதமான போக்குவரத்து வசதியாகும். இதில் இளைஞர்கள் ரீல்ஸ் மற்றும் வீடியோவிற்காகவோ அல்லது சிறிது நேரச் சந்தோஷத்திற்காகவோ மற்றவருக்கு இடையூறு செய்யும் வகையிலும் பொருட்களை சேதாரப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது சட்டப்படி குற்றம் இவர்கள் மீது அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








