இந்த காரை வாங்க ரூ4 கோடி பணம் இருந்தா மட்டும் போதாது! இந்த தகுதி இருந்தா மட்டும் தான் காரை வாங்க முடியும்!
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது தனித்துவமான ஏஎம்ஜி ஜி 63 கிராண்ட் எடிசன் என்ற லிமிடெட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 25 கார்கள் தான் இந்தியாவில் விற்பனையாக உள்ளன. சர்வதேச அளவில் 1000 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்தியாவில் ரூபாய் 4 கோடி என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் விலை உயர்ந்த கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தில் தயாரிப்புகளுக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது தனது தனித்துவமான கார் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஏஎம்ஜி ஜி63 கிராண்ட் எடிசன் என்ற லிமிடெட் எடிசன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. லிமிடெட் எடிசன் கார் தான் என்பதால் வெறும் 25 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாக உள்ளன. சர்வதேச அளவில் வெறும் ஆயிரம் கார்கள் மட்டுமே தயாராகி விற்பனைக்கு போக உள்ளது. இந்த கார் இந்தியாவில் ரூபாய் 4 கோடி என்ற நிலையில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த காரை வாங்குவதற்கு என்று சில தகுதிகளை நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே மெர்சிடிஸ் மேபேட்ச், மெர்சிடிஸ் ஏஎம்ஜி அல்லது மெர்சிடீஸ் எஸ் கிளாஸ் ஆகிய கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த காரை வாங்க தகுதியுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் 2024ம் ஆண்டு முதல் காலாண்டில் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி 63 கிராண்ட் எடிசன் காரைப் பொறுத்தவரை நைட் பிளாக் மேக்னோசெட் கலரில் இருக்கிறது. இதில் ஆங்காங்கே தங்க நிற டீடைல் வழங்கப்பட்டுள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் ஜீ மாடல் காரான 1979 காரில் வந்த சில அம்சங்களை இன்ஸ்பயர் செய்து இந்த காரை வடிவமைத்துள்ளது.
இந்த காரில் பொறிக்கப்பட்டுள்ள ஏஎம்ஜி மற்றும் மெர்சிடிஸ் ஆகிய லோகோக்கள் களகாரி கோல்ட் மேக்கான் ஷேடில் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த காரில் முன்பக்கம் மற்றும் பின்பக்க பம்பர்கள் இதே களகாரி கோல்ட் மகான் சேடுகளில் வழங்கப்பட்டுள்ளது.ஸ்பெஷல் எடிசன் காரில் 22 இன்ச் பாக்டு வீல் கிராஸ்போர்ட் டிசைன் டெக் கோல்ட் மற்றும் மாட் பிளாக் சென்ட்ரல் லாக்கிங் நெட் ஆகியன வழங்கப்பட்டுள்ளது மெர்சிடீஸ் லோகோ டெக் கோல்ட் நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

உட்புறத்தை பொருத்தவரை கருப்பு மற்றும் தங்க நிற கான்ட்ராஸ்ட் கலரில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஏஎம்ஜி எம்பளம் வழங்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் ஜி மேனுஃபேக்சர் பிளாக் நிப்பான் லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்க நிற தையல் வழங்கப்பட்டுள்ளது. இதன் சீட்டுகளில் சாய்வு பகுதியில் ஏஎம்ஜி லோகோ தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ப்ளோர் மேட்டுகள் கருப்பு நிறத்தில் தங்க நிற தையல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மெர்சிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி 63 எடிசன் காரின் இன்ஜினை பொருத்தவரை 4.0 லிட்டர் பின் டர்போ சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இது 577எச்பி பவரையும் 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டது அதிகபட்சமாக 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராண்ட் எடிஷன் காரில் ஆல்வின் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது இந்த கார் ஒரு சில கான்ஃபிகரேஷன் ஆப்சன் உடன் தான் வருகிறது முக்கியமாக இதன் பெயின் உட்புற வசதி அலாய் ஆகியன மாற்ற முடியாதபடி அதே கான்ஃபிகிரேஷனில் தான் இருக்கும் மற்ற விஷயங்களை மட்டும் தான் மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஏஎம்ஜி ஜி63 கிராண்ட் எடிஷன் காரை தனது வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பல வாடிக்கையாளர்கள் இப்படியான ஒரு கார் தங்களுக்கு வேண்டும் என விருப்பம் தெரிவித்ததன் பெயரில் சர்வதேச அளவில் ஆயிரம் கார்கள் மட்டும் தயாரித்து அதில் இந்தியாவிற்கு 25 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த கார்கள் அறிமுகமானவுடன் வெற்றி தீரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









