இந்த காருக்கு 4.6 செகண்ட் போதும் 0-100கிமீ வேகத்தை அசால்டா தொட்டுவிடும்.. வேகத்தை போலவே விலையும் பயமுறுத்துது!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் அதன் ஏஎம்ஜி சி43 சொகுசு கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வாகன உற்பத்தியாளர்கள் வரும் பண்டிகைத் தினத்தை சிறப்பிக்கும் விதமாக புதிய மற்றும் சிறப்பு பதிப்பு வாகன மாடல்களை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலிலேயே சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ஸ், அதன் சார்பில் ஓர் புதுமுக வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. நிறுவனம், இந்த மாடலை மட்டுமில்லைங்க புதுப்பிக்கப்பட்ட ஜிஎல்இ கார் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mercedes amg c43

இந்த பதிவில் பென்ஸின் ஏஎம்ஜி சி43 சொகுசு கார் பற்றிய விரிவான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி சி43 4 மேட்டிக் சொகுசு காரையே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 98 லட்சம் அது நிர்ணயம் செய்திருக்கின்றகு. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை கோடியை தொடக் கூடும். இத்தகை விலை உயர்ந்த சொகுசு காராகவே இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது சி43 ஏஎம்ஜி 4மேட்டிக்.

Mercedes amg c43 wheel

மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டதாக இந்த கார் காட்சியளிக்கின்றது. தோற்றத்தில் மட்டுமில்லைங்க எஞ்ஜின் திறனை வெளிப்படுத்துவதிலும் இந்த கார் மிகவும் ஆக்ரோஷமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த சொகுசு காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரையே பென்ஸ் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இது ஓர் பவர்ஃபுல் மோட்டார் ஆகும்.

இதனால் அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதேபோல், இதனால் வெறும் 4.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இந்த காரால் எட்ட முடியும்.

Mercedes amg c43 headlamp

இத்தகைய ஆக்ரோஷமான திறனை வெளியேற்றும் சொகுசு காராகவே ஏஎம்ஜி சி43 காரை மெர்சிடிஸ் பென்ஸ் உருவாக்கி இருக்கின்றது. இந்த அதீத திறனுக்கு ஏற்றாற்போலவே காரின் வெளிப்புற தோற்றமும் உள்ளது. பென்ஸின் கையெழுத்து அடங்கிய க்ரில் மற்றும் அடாப்டீவ் எல்இடி ஹெட்லேம்ப், பெரிய பம்பர், ஏஎம்ஜி வகை அலாய் வீல்கள் மற்றும் இரு துளைகள் கொண்ட வெளியேற்றம் குழாய்கள் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர சிறப்பம்சங்களாக 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 11.9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் வகை, மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்களையும் ஏஎம்ஜி சி43 காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது.

Mercedes amg c43 top view

காரின் மைலேஜ் திறனை அதிகரிக்கச் செய்ய ஏதுவாக 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அம்சத்துடன் 9 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும் அதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ரைடிங் மோட்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்லிப்பரி (Slippery), கம்ஃபோர்ட் (Comfort), ஸ்போர்ட் (Sport), ஸ்போர்ட் பிளஸ் (Sport+) மற்றும் இன்டிவிசுவல் (Individual) ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பென்ஸ் கார்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே வரும் விழா நாட்களில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு அந்நிறுவனம் இரு புதிய கார்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றின் வாயிலாக அடுத்து வரும் நாட்களில் நல்ல சேல்ஸ் விகிதத்தை அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 17:32 [IST]
English summary
Mercedes benz amg c43 launched in india at rs 98 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X