2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி லக்சரி கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? ரிவியூ வீடியோ!!

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC) லக்சரி எஸ்யூவி கார் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே இந்தியாவில் துவங்கப்பட்டு விட்டன. காரை முன்பதிவு செய்வதற்கு டோக்கன் தொகையாக ரூ.1.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

300 4மேட்டிக் மற்றும் 220டி 4மேட்டிக் என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரின் 300 4மேட்டிக் என்ற பெட்ரோல் வேரியண்ட்டை சமீபத்தில் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைக்கப் பெற்ற அனுபவங்களை வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த ரிவியூ வீடியோவை கீழே காணலாம்.

இந்த டெஸ்ட் டிரைவ்வை நாங்கள் கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரியமிக்க ஹம்பி என்ற பகுதியில் மேற்கொண்டோம். நீண்ட கால வரலாற்றை கொண்ட பகுதியான ஹம்பியின் இயற்கை செழிப்பையும் மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். முன்னர் காலத்தில் மன்னர்கள் பலரது ஆட்சிப் பகுதியாக ஹம்பி விளங்கியது. ஒரு காலத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வாகனங்கள் சென்ற பகுதியில் இன்றைய கால மாடர்ன் பென்ஸ் காரை இயக்கி பார்த்ததை பெருமையாக கருதுகிறோம்.

2023 mercedes-benz glc review video

நாங்கள் இயக்கி பார்த்த 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 300 4மேட்டிக் காரில் 1,999சிசி டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் வழங்கப்படுகிறது. என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 8, 2023, 12:48 [IST]
English summary
Mercedes benz glc suv review video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+