பென்ஸ் கார்கள் கோட்டையாக இந்தியா!! அடுத்தடுத்து புதிய கார்கள் விற்பனைக்கு வந்திருக்கு!
2023 மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz GLE LWB) சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு புதியதாக வந்திருக்கும் இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.96.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற விலையுயர்ந்த சொகுசு கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறுகின்ற அதன் குறிப்பிட்ட சில கார்களில் லாங் வீல்பேஸ் வெர்சனை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதாவது, வழக்கமான நீளத்தை விட கூடுதல் நீளத்தில் லாங் வீல்பேஸ் கார்கள் இருக்கும். வீல்பேஸ் என்பது காரின் முன் சக்கரங்களுக்கும், பின் சக்கரங்களுக்கும் இடையேயான தூரம்.

சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரிக்கும்போது, தானாக காரின் நீளமும் அதிகரிக்கிறது. இவ்வாறான லாங் வீல்பேஸ் காராக புதிய 2023 மெர்சிடிஸ் ஜிஎல்இ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.96.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் பெறலாம்.
300டி 4மேட்டிக், 450 4மேட்டிக், 450டி 4மேட்டிக் என்பன அந்த 3 வேரியண்ட்களாகும். ரூ.96.4 லட்சம் என்பது 300டி 4மேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மற்ற இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.1 கோடி மற்றும் ரூ.1.15 கோடி. எண்ட்ரீ-லெவல் 300டி 4மேட்டிக் வேரியண்ட் புரோஃபெஸ்ஷ்னல் லைன் ட்ரிம் லைனிலும், மற்ற இரு வேரியண்ட்கள் ஏஎம்ஜி லைனிலும் கிடைக்கும்.
இந்த 3 வேரியண்ட்களிலும் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்துடன், 300டி 4மேட்டிக் வேரியண்ட்டில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 265.5 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கும். இந்த வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டிவிடலாம். டாப்-ஸ்பீடு 230kmph.
அதுவே, புதிய மெர்சிடிஸ் ஜிஎல்இ காரின் டாப் வேரியண்ட்டான 450டி 4மேட்டிக்-இல் பொருத்தப்படும் 3.0 லிட்டர் ஸ்ட்ரைட்-6 சிலிண்டர் என்ஜின் 366 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் வெளிப்படுத்தக்கூடியது. இந்த வேரியண்ட்டில் 0-100kmph வேகத்தை சற்று விரைவாக 5.6 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த வேரியண்ட் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 250kmph வேகத்தில் செல்ல முடியும்.
புதிய ஜிஎல்இ காரின் ஒரேயொரு பெட்ரோல் வேரியண்ட்டான 450 4மேட்டிக்கில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலம் 381 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த பெட்ரோல் வேரியண்ட்டிலும் வெறும் 5.6 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டிவிடலாம். அதேபோல், இந்த வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடும் 250kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தைக்கு மெர்சிடிஸ் ஜிஎல்இ எஸ்யூவி கார் ஒன்றும் புதியது அல்ல. தற்போது இதன் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பென்ஸ் காரின் மிக முக்கிய சிறப்பம்சம் அதன் மைல்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் ஆகும். மேலும், காரின் தோற்றமும் நன்கு மெருக்கேற்றப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








