சரவணா ஸ்டோர் ஓனர், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் காத்திருந்த நாளை அறிவித்த பென்ஸ்..

இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) இருக்கின்றது. இந்த காரின் அறிமுக நாள் பற்றிய விபத்தையே தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஜிஎல்எஸ் (GLS)-ம் ஒன்றாகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இந்த நாள் பற்றிய தகவலே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

Mercedes benz gls

அதாவது, ஃபேஸ்லிஃப்ட் ஜிஎல்எஸ் (GLS Facelift) கார் மாடலின் அறிமுக தேதியே தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. வருகின்ற 8 ஜனவரி 2024 லேயே இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்திய பெரும் செல்வந்தர்கள் இந்த காரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்ற சூழலிலேயே, அதன் அறிமுக நாள் பற்றிய விபத்தை மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கின்றது.

இந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் வரும் 2024 ஆம் ஆண்டில் மிக பெரிய எண்ணிக்கையில் கார்களை களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதாவது, ஒட்டுமொத்தமாக ஒன்பது புதிய தயாரிப்புகளை அது நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதில் ஒன்றே மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகும்.

Mercedes benz gls front design

இதைத்தொடர்ந்து, இ கிளாஸ் எல்டபிள்யூபி (E-Class LWB), இக்யூஎஸ் எஸ்யூவி (EQS SUV), எலெக்ட்ரிக் ஜி (Electric G), புதிய ஏஎம்ஜி ஜிடி (new AMG GT), ஜிஎல்சி கூபே (GLC Coupe), சிஎல்இ கிளாஸ் (CLE Class), ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் (GLA facelift) மற்றும் ஜிஎல்பி ஃபேஸ்லிஃப்ட் (GLB facelift) உள்ளிட்ட கார் மாடல்களையும் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

புதுப்பித்தலின்கீழ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட்-இல் பல்வேறு சிறப்பம்சங்களை மெர்சிடிஸ் பென்ஸ் சேர்த்து இருக்கின்றது. உள் மற்றும் வெளிப்பக்கம் என அனைத்திலும் நிறுவனம் மாற்றத்தைச் செய்திருக்கின்றது. புதிய ஜிஎல்எஸ் சற்று பெரிய கிரில்லால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கிரில் சற்று கவர்ச்சியான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

Mercedes benz gls interior design

இதற்கு அதில் இடம் பெற்றிருக்கும் செங்குத்தான நான்கு சில்வர் நிற பட்டைகளே காரணம் ஆகும். இப்போது விற்பனையில் இருக்கும் ஜிஎல்எஸ் கார் மாடலில் இரண்டு பட்டைகள் மட்டுமே கிரில்லில் இருக்கும். மேலும், புதிய ஜிஎல்எஸ் காரில் மல்டி பீம்கள் கொண்ட எல்இடி லைட் ஹெட்லைட் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், எல்இடி டிஆர்எல்கள், இரண்டு ஏர் இன்டேக் துளைகள் கொண்ட பம்பர், குரோம் நிற பிளேட் (அடிப்பகுதியில்) உள்ளிட்டவை இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புறத்தில் செய்யப்பட்டு இருப்பதைப் போல காரின் உட்புறத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

Mercedes benz gls rear design

புதிதாக இரண்டு பெரிய திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில், ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக செயல்படும். இத்துடன், குளாஸ்ஸி பிரவுன் நிறத்திலான மர பேனல்கள் காரின் உள் பக்கத்தை அலங்கரிக்கும் விதமாக பெனஸ் வழங்கி இருக்கின்றது.

மேலும், 360 டிகிரி கேமிரா, லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, பயணிகளுக்கான 11.6 அங்குல திரை, 7 அங்குல ரிமூவபிள் டேப்ளட் ஆகியவையும் புதிய ஜிஎல்எஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டாகவும் வசதிக் கொண்ட இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், மசாஜ் செய்யும் வசதிக் கொண்டு இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோன்று ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்திய சொகுசு கார் பிரியர்களின் மனம் கவர்ந்த காராக ஜிஎல்எஸ் இருக்கின்றது. இதில் இட வசதியும் மிக தாராளம். எனவே சொகுசான ரைடுக்கு கொஞ்சம் கூட இந்த காரில் பஞ்சம் இருக்காது. இதேபோல் பாதுகாப்பிற்கும் இந்த காரில் கொஞ்சம்கூட குறைச்சல் இருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு கருவிகள் பலவற்றை இந்த காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. 9 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் சிஸ்டம், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், அடாஸ் ஆகியவையே வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 3.0லிட்டர், 6 சிலிண்டர் டீசல் மற்றும் 3.0லிட்டர் பெட்ரோல் ஆகிய தேர்வுகளே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு. இதன் விளைவாகவே அதன் அப்டேட் வெர்ஷனை இந்தியாவில் விரைவில் களமிறக்க இருக்கின்றது, பென்ஸ். இப்போதுக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இதன் வருகை இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 23:01 [IST]
English summary
Mercedes benz gls facelift launch date revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X