மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களிலேயே விலை குறைவானது!! ஏ-கிளாஸ் செடான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் அறிமுகம்!
மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனம் இந்தியாவில் ஏ-கிளாஸ் செடான் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துடன் இந்த காருடன் ஒரு ஏஎம்ஜி காரும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ் கார்களை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் செடான் கார்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ஏனெனில் பழமையான ஜெர்மனி லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் தற்சமயம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான கார்களுள் ஒன்று ஏ-கிளாஸ் ஆகும். இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் ஏ200 லிமௌசைன் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏ200 லிமௌசைன் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.45.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்திலேயே கொண்டுவரப்பட்டு உள்ளன. குறிப்பாக, முன்பக்க க்ரில்லின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் க்ரில்லில் புதிய பேட்டர்ன் பின்பற்றப்பட்டுள்ளது.
புதிய பேட்டர்னை பற்றி பேசும்போது, காரின் பின்பக்க டெயில்லைட்களின் பேட்டர்னும் மாற்றப்பட்டுள்ளதை பற்றி கூறி ஆக வேண்டும். இந்த மெர்சிடிஸ் லக்சரி செடான் காரில் 17-இன்ச்சில் புதிய 10-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உட்பக்கத்தில் மாற்றங்கள் என்று பார்த்தால், டச்-சென்சிடீவ் பட்டன்களுடன் ரீடிசைனில் ஸ்டேரிங் சக்கரம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 10.25-இன்ச்சில் இரு திரைகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், கார்-டூ-எக்ஸ் வசதி, மெர்சிடிஸ் மீ செயலி, 'ஹே மெர்சிடிஸ்' வாய்ஸ் உதவி போன்றவையும் இந்த காரில் உள்ளன. புதிய ஏ200 லிமௌசைன் ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.3 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், ஏ-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காருடன் ஓர் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினோம் அல்லவா. அந்த கார், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ ஆகும். இது செடான் ரக கார் கிடையாது, ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. ஏ-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் அனைத்தும் இந்த ஏஎம்ஜி காரிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கூடுதலாக, பிரத்யேக ஏஎம்ஜி கிராஃபிக்ஸ் உடன் அப்டேட் செய்யப்பட்ட எம்பக்ஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எம்பக்ஸ் சிஸ்டம் என்பது காரின் உட்பக்க டேஸ்போர்டில் வழங்கப்படும் செட்அப் ஆகும். ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ காரில் 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 415 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவிற்கு ஏற்ற மெர்சிடிஸ் கார் என்றால் அது ஏ-கிளாஸ் செடான் கார் ஆகும். மற்ற மெர்சிடிஸ் லக்சரி கார்களை காட்டிலும் விலை குறைவானது என்பது இதன் மிக பெரிய பலம். அத்தகைய காரின் தோற்றத்தையே மெர்சிடிஸ் நிறுவனம் புத்துணர்ச்சியானதாக மாற்றியுள்ளது. அத்துடன் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஏஎம்ஜி வெர்சனும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









