கார்களிலும் சாட் ஜிபிடி கால் தடம் பதிக்கிறது... சாஃப்ட்வேர அப்டேட் செஞ்சா போதும் காருல பயன்படுத்திக்கலாம்!

சாட் ஜிபிடி, இந்த உலகையே புரட்டிப்போட வந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் ஆகும். தேடு பொறி உலகின் காட் ஃபாதராக பார்க்கப்படும் கூகுளுக்கே சவால்விடும் விதமாக இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக நமக்கு தெரியாத விஷயங்கள் பலவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ள முடியும்.

இதையேதான் கூகுளும் செய்கிறது, இப்படியாக சாட் ஜிபிடி வந்த புதிதில் நக்கலடித்தவர்கள் பலர். அவர்களையே ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் விதமாக பல்வேறு சூப்பரான செயல்களை செய்துக் கொண்டிருக்கின்றது சாட் ஜிபிடி. பின் நாட்களில் அவர்களையே தன்னுடைய பயன்பாட்டாளர்களாக சாட் ஜிபிடி மாற்றியது தனிக் கதை.

Mercedes benz voice control with chatgpt

ஒரு சின்ன லீடை மட்டும் கொடுத்தால் போதும் அதைக் கொண்டு ஓர் கதையையே உருவாக்கச் சொன்னாலும் அதை செய்துவிடும். கட்டுரை, செய்தி மற்றும் கதை என அனைத்தையும் அது உருவாக்கும் திறன்மிக்கது. அந்த அளவிற்கு திறமைக் கொண்டதே சாட் ஜிபிடி ஏஐ தொழில்நுட்பம்.

இத்தகைய சூப்பரான தொழில்நுட்பத்தை இனி காரிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஓர் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அறிவித்து உள்ளது. முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

Chatgpt

சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் இதுகுறித்த ஓர் அறிவிப்பை நேற்றைய (ஜூன் 15) தினத்தில் வெளியிட்டிருந்தது. அதில், "உலகம் முழுவதும் பேசு பொருளாகி இருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிக் கொண்ட சாட் ஜிபிடி-யை பென்ஸ் கார்களிலும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய தினம் சுமார் 9 லட்சம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் வாயிலாக சாட் ஜிபிடி-யை பயன்படுத்தும் வசதியை அந்த நிறுவனம் வழங்கி இருக்கின்றது. முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

விரைவில் அமெரிக்காவில் உள்ள அனைத்து பென்ஸ் கார் பயன்பாட்டாளர்களுக்கும் இந்த வசதியை வழங்க நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. இதேபோல் உலகின் பிற நாடுகளில் உள்ள பென்ஸ் கார் பயன்பாட்டாளர்களுக்கும் இந்த வசதியை வழங்கும் முயற்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இனி சாட் ஜிபிடி பயனர்கள் தங்களின் பென்ஸ் கார்களிலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. தன்னுடைய 'ஹே மெர்சிடிஸ்' என்கிற வாய்ஸ் அசிஸ்டன்ட் சிஸ்டத்தின் ஊடாகவே இந்த சாட் ஜிபிடி வசதியை மெர்சிடிஸ் வழங்கியிருக்கின்றது.

மேலும், சாட் ஜிபிடி தன்னுடைய இந்த ஹே மெர்சிடிஸ் வாய்ஸ் அசிஸ்டன்ஸை ஆதரிக்கும் என பென்ஸ் தெரிவித்துள்ளது. ஆகையால், சாட் ஜிபிடி வாயிலாக வாய்ஸ் கட்டளை கொடுத்து சில செயல்களைச் செய்துக் கொள்ள முடியும் என தெரிகின்றது. இதுதவிர உரையாடல்களுக்கும் இது வழிவகுக்கும்.

எனவே, ஷேக்ஸ்பியரின் கவிதை தொடங்கி சுவாரஷ்யமான பல்வேறு உரையாடல்களை செய்துக் கொள்ள முடியும். மிகவும் போர் அடித்தால் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார், தமிழகத்தில் தாமரை மலருமா-மலராதா மற்றும் திமுக குடும்ப ஆட்சியைதான் செய்கிறதா போன்ற சர்ச்சையான கேள்விகளை எழுப்பி சாட் ஜிபிடி-யை வம்பில் மாட்டிவிடலாம்.

இதுதவிர, இரவு என்ன டின்னர் சமைக்கலாம், டிரெண்டிங்கில் உள்ள சமையல் என்ன? அதை எப்படி சமைப்பது?, அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பது பற்றிய தகவல்களையும் கேட்டு தெரிந்துக் கொள்ள முடியும். அனைத்து கேள்விகளுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவுக் கொண்ட தொழில்நுட்பம் நண்பர்களைவிட பொறுமையாக இருந்து நமக்கு பதிலளிக்கும்.

இத்தகைய அம்சத்தையே மெர்சிடிஸ் பென்ஸ் தன்னுடைய கார்களில் வழங்க ஆரம்பித்திருக்கின்றது. விரைவில் இந்த சாட் ஜிபிடி ஏஐ தொழில்நுட்பத்தை, காரை முழுவதுமாக கன்ட்ரோல் செய்வதற்கு ஏற்ப வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயார் செய்ய இருக்கின்றன. இந்த பணியில் ஏற்கனவே பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. சாட் ஜிபிடி வசதிக் கொண்ட வாய்ஸ் அசிஸ்டன்டை தன்னுடைய கார்களில் வழங்கும் பணியிலேயே ஜெனரல் மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவில் இந்த உலகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆளவிருக்கின்றது. இதற்கான ஆரம்ப புள்ளியே சாட் ஜிபிடி ஆகும். இதன் வருகையால் கல்வி நிறுவனங்கள் சில ஏற்கனவே இழப்பைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த கருவியை மாணவர்கள் பலர் தங்களது கல்வி சார்ந்த சேவைகளுக்கு பயன்படுத்த தொடங்கியதே இந்நிலைக்கு காரணமாக உள்ளது. விரைவில் இதுபோன்று இன்னும் பல துறைகளில் ஏஐ தன்னுடைய ராஜ்ஜியத்தை நிலை நாட்ட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 20:11 [IST]
English summary
Mercedes benz started chatgpt as a beta program in their vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+