இந்த கார் வேற லெவல்ல இருக்குது! மெர்சிடீஸ் பென்ஸ் கார்ன்னா சும்மாவா? வீடியோவ முழுசா பாருங்க!

மெர்சிடிஸ் நிறுவனம் 030 ஆம் ஆண்டிற்குள் தனது கார்களை எல்லாம் எலக்ட்ரிகால்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் நிலையில் வரிசையாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியா எலக்ட்ரிக் வாகன சந்தைக்கு மிக சாதகமான மார்க்கெட் என்பதால் இந்தியாவிலும் வண்ண நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் 500 என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது இந்த காரை ஓட்டி பார்க்க மெஸ்சிடிஸ் நிறுவனம் பார்க் குழுவை காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு அழைத்தது அதன் பெயரில் எங்கள் குழுவும் நேரடியாக அங்கு சென்று இந்த காரை ஓட்டி பார்த்தது. இந்த அனுபவத்தை உங்களுக்கு வீடியோவாக கீழே பகிர்ந்துள்ளோம்.

இந்த காரில் 90.56 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் உள்ளது இது டூயல் மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த டூயல் மோட்டார் செட் அப் 402 பிஎச்பி பவரையும் 858என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 நொடியில் பிக்கப் செய்து விடும். அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

mercedes eqe 500 tamil review

இந்த காரில் பெரிய பேட்டரி பேக் இருப்பதால் அதிக ரேஞ்ச் தரும் காராக இது இருக்கிறது. ஒரு தடவை சார்ஜ் செய்தால் 550கி.மீ வரை இந்த கார் ரேஞ்ச் தரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரை ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் 9.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும் என தெரிவித்துள்ளது. இதுபோக டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனையும் சப்போர்ட் செய்யும் வசதி இந்த காரிலிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 29, 2023, 12:00 [IST]
English summary
Mercedes eqe 500 electric car video review all you need to watch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+