சினிமா பிரபலங்கள் வாங்கி குவிக்க போறாங்க!! மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்ஸ் &ஏஎம்ஜி ஜி63 கார்களுக்கு புக்கிங் ஸ்டார்ட்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் மேபக் ஜி.எல்.எஸ் மற்றும் ஏ.எம்.ஜி ஜி63 கார்களுக்கான முன்பதிவுகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய மெர்சிடிஸ் கார்கள் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 14 மேட்-இன்-இந்தியா கார்களை விற்பனை செய்கிறது. அதேநேரம் சில கார்கள் மொத்தமாக வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது அவற்றிற்கான பாகங்களை உற்பத்தி செய்வது, பின்னர் பாகங்களை அசெம்பிள் செய்வது என அனைத்தும் வெளிநாட்டில் இருக்கும் தொழிற்சாலையிலேயே முடிந்துவிடுகின்றன.

மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்ஸ் &ஏஎம்ஜி ஜி63 புக்கிங் ஸ்டார்ட்!!

இவ்வாறு, உற்பத்தி வேறொரு நாட்டில் செய்யப்பட்டு, விற்பனைக்காக மட்டும் இந்தியாவை பயன்படுத்தி கொள்ளும் கார்களுக்கு மத்திய அரசு அதிகப்படியான இறக்குமதி வரிகளை விதிக்கிறது. இதனாலேயே மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு சிபியூ எனப்படும் முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருக்கும். ஏற்கனவே கூறியதுபோல், மெர்சிடிஸ் இந்தியா பிராண்டிலும் அவ்வாறான கார்கள் இருக்கின்றன.

அத்தகைய மெர்சிடிஸ் கார்களுள் இரண்டு தான், ஏஎம்ஜி ஜி63 மற்றும் ஜி.எல்.எஸ் 600 எஸ்யூவி ஆகும். வரிகளினால் விலைகள் அதிகமாக இருக்கும் போதிலும் இந்த மெர்சிடிஸ் கார்களுக்கும் நல்லப்படியான வரவேற்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஏஎம்ஜி ஜி63 மற்றும் ஜி.எல்.எஸ் 600 கார்களுக்கான முன்பதிவுகளை மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மீண்டும் துவங்கியுள்ளது.

மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்ஸ் &ஏஎம்ஜி ஜி63 புக்கிங் ஸ்டார்ட்!!

ஏஎம்ஜி ஜி63 மற்றும் மேபக் ஜிஎல்எஸ்600 கார்களின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்யப்பட்டு விடுகின்றன. இவை இரண்டும் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விலைமிக்க உயர் தரத்திலான கார்களாக பார்க்கப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், இத்தகைய கார்கள் தான் 69% வளர்ச்சி உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் அதிகப்படியான வளர்ச்சியை காணும் பிரிவாக உள்ளது.

இந்த பிரிவில் ஏஎம்ஜி ஜி63 மற்றும் மேபக் ஜிஎல்எஸ் 600 கார்களுடன் ஏஎம்ஜி இ53 காப்ரியோலெட், ஜிஎல்எஸ் மேபக், எஸ்-கிளாஸ், எஸ்-கிளாஸ் மேபக் மற்றும் இக்யூஎஸ் இவி உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த லக்சரி கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துவரும் காரணத்தினால், இந்த பிரிவில் அவ்வப்போது புதிய மாடல்களை வெளிநாட்டு சந்தைகளில் இருந்து கொண்டுவரும் திட்டத்தில் உள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்ஸ் &ஏஎம்ஜி ஜி63 புக்கிங் ஸ்டார்ட்!!

எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமின்றி, இவ்வாறு நேரடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களின் விற்பனையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்படும் மற்றொரு இடையூறு என்னவென்றால், காத்திருப்பு காலம். அதாவது காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர் அதன்பின் டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவு ஆகும். சிபியூ வாகனங்களுக்கு வெயிட்டீங் பிரீயட் அதிகமாகவே இருக்கும்.

இருப்பினும், புதிய மேபக் ஜி.எல்.எஸ்600 காருக்கான காத்திருப்பு காலத்தை 8 மாதங்களில் இருந்து 10 மாதங்களுக்கு உள்ளாக நிர்ணயிக்கவும், ஏஎம்ஜி ஜி63 காரை 12 - 16 மாதங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுத்துவிட வேண்டும் எனவும் மெர்சிடிஸ்-பென்ஸ் முனைப்புடன் உள்ளது. இதில் குறிப்பாக, ஏஎம்ஜி ஜி63 காரை டெலிவிரி பெறுவதற்கு 3 வருடங்கள் வரையில் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை தற்சமயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2023, 10:40 [IST]
English summary
Mercedes india announced bookings for maybach gls and amg g63 have been reopened
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+