Mercedes-Maybach EQS680 வெளியீடு.. ஊருக்குள்ள சொகுசு இ-காருல சுத்துறதுனு முடிவு பண்ணிட்டீங்கனா இத பாருங்க!

உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ்-மேபேக் (Mercedes-Maybach), அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்யூஎஸ் 680 (Mercedes-Maybach EQS680) எனும் மாடலையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இதனை சொகுசு வசதிகளை வாரி வழங்கும் முழு ஆடம்ப ரக வகானமாக மெர்சிடிஸ் மேபேக் தயாரித்து இருக்கின்றது.

விரைவில் இந்த கார் உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டே இக்யூஎஸ் 680 எலெக்ட்ரிக் கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சொகுசு எஸ்யூவி ரக காராகும். நிறுவனத்தின் கடந்த கால சூப்பர் ஸ்டார் மாடல்கள் சிலவற்றை லேசாக தழுவியே இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

mercedes maybach eqs suv

டிசைன் மற்றும் சொகுசு வசதிகள் உள்ளிட்டவற்றில் மேபேக் எஸ்580 மற்றும் மேபேக் 600 ஆகியவற்றுடன் புதுமுக கார் லேசாக ஒத்துப்போகின்றது. இந்த இரண்டும் ஐசிஇ மோட்டார் கொண்ட வாகனங்கள் ஆகும். அதேவேளையில், பற்பல தனித்துவமான அம்சங்களையும் புதுமுக எலெக்ட்ரிக் கார் இக்யூஎஸ் 680-இல் நம்மால் காண முடிகின்றது.

அந்தவகையில், தனித்துவமான டூயல் டோன் நிறங்கள், கவர்ச்சிகரமான பாடி பேனல்கள், லைட் செட்-அப் மற்றும் மிக அழகிய க்ரில் (முன்பக்கத்தில்) ஆகியவை மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் 680-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, இந்த காரின் முகப்பு பகுதியில் இடம் பெற்றிருக்கும் க்ரில் காருக்கு வேற லெவல் அழகை சேர்க்கும் வகையில் இருக்கின்றது.

mercedes maybach eqs suv rear seat entertainment

குரோம் பூச்சுடன் அதனை மெர்சிடிஸ் அழகுப்படுத்தி இருக்கிறது. இதேபோல், முன் பக்கத்தின் இரு முனைகளிலும் ஏர் டேம்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அங்கும் தனித்துவமான வடிவமைப்பு யுக்தியையே மெர்சிடிஸ் கையாண்டு இருக்கின்றது. ஆகையால், மிக அழகிய எலெக்ட்ரிக் காராக அது மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் 680 காட்சியளிக்கின்றது.

இதுமட்டுமின்றி, காரின் பக்கவாட்டு மற்றும் பின் பகுதியிலும் ஏகப்பட்ட அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அதன் 22 அங்குல வீல் முற்றிலும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. வேறு எந்த காரிலும் இந்த அளவு அழகிய காரை நம்மால் காண முடியாது. வெளிப்புறத்தில் மட்டும் இல்லைங்க இந்த காரின் உட்பக்கம் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றது.

mercedes maybach eqs suv rear view

மிகப் பெரிய ஹைபர்ஸ்கிரீனே இந்த காரில் வவங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பம் கொண்டது. இதுதவிர அனைத்து இருக்கைகளுக்கும் 11.6 அங்கு எச்டி தொழில்நுட்பம் வசதிக் கொண்ட திரைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாக அனைத்து பயணிகளுக்கும் சூப்பரான என்டர்டெயின்மென்ட் கிடைக்கும்.

காரின் இருக்கையில் நப்பா வெஜிடபிள் லெதர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. விலங்களுகளின் தோலால் செய்யப்படும் லெதருக்கு பதிலாக தனித்துவமாக வெஜ் லெதரை இந்த காரில் மெர்சிடிஸ் மேபேக் வழங்கி உள்ளது. 4டி சரவுண்ட் சிஸ்டம் வசதிக் கொண்ட 15 ஸ்பீக்கர்கள், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், ரோல்ட் கோல்ட் ஒயிட் மற்றும் அமிதிஸ்ட் குளோவ் ஆகிய நிறங்களில் உட்புறம் பிரீமியம் வசதிகளை இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது, மெர்சிடிஸ்.

மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் 680 எலெக்ட்ரிக் காரில் ஓர் ஃபுல் சார்ஜில் 600 கிமீட்டருக்கும் அதிகமான கிமீ நம்மால் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 135 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், அனைத்து வீல்களுக்கும் இயக்க திறனை வழங்கும் பொருட்டு டூயல் மோட்டார் செட்-அப்பே இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் 658பிஎஸ் பவரையும், 950என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான சொகுசு எலெக்ட்ரிக் காரையே மெர்சிடிஸ் மேபேக் நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2024க்குள் இந்த மேபேக் இக்யூஎஸ் 680 இந்திய சந்தையை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் மெர்சிடிஸ் மேபேக் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான காராக மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் 680 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காரை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்களுக்கான மிக சிறந்த தேர்வாக இந்த வாகனம் இருக்கும். ஆனால், இதன் விலை 2-3 கோடிகளுக்கும் அதிகமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 18, 2023, 8:52 [IST]
English summary
Mercedes maybach first electric eqs 680 unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X