காரின் கேபினை டிசைன் செய்வதில் மெர்சிடிஸை அடிச்சிக்க முடியாது - புதிய இ-கிளாஸின் கேபின் இப்படிதான் இருக்கும்!!

ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் புதிய தலைமுறை இ-கிளாஸ் செடான் காரின் உட்பக்க கேபின் குறித்த விபரங்களை படங்களுடன் வெளியீடு செய்துள்ளது. அவற்றின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் கார் ஆனது இந்த 2023ஆம் வருடத்தின் இறுதிக்குள் உலகளவில் வெளியீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த லக்சரி எலக்ட்ரிக் செடான் காரின் கேபின் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின்படி பார்க்கும்போது, புதிய இ-கிளாஸ் காரின் கேபின் ஆனது புதிய நிலைக்கு கார்களின் கேபினை கொண்டு சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் காரின் கேபின் இப்படிதான் இருக்கும்

இ-கிளாஸின் கேபினில் மிக முக்கிய அம்சமாக எம்பக்ஸ் (MBUX) சூப்பர் ஸ்க்ரீன் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. எம்பக்ஸ் சூப்பர் ஸ்க்ரீன் ஆனது மெர்சிடிஸ் இக்யூஎஸ் காரில் காணப்படும் ஹைப்பர் ஸ்க்ரீனை காட்டிலும் அளவில் சிறியதாகும். இருப்பினும் ஹைப்பர் ஸ்க்ரீன் செட்அப்பில் வழங்கப்படுவதை போன்று ஏகப்பட்ட திரைகள் சூப்பர் ஸ்க்ரீன் செட்அப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த சூப்பர் ஸ்க்ரீன் செட்அப்பில் ஒரே நீள கண்ணாடி ஆனது இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் முன் இருக்கை பயணிக்கான திரையை மட்டுமே கவர் செய்துள்ளது. மற்றப்படி ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்பக்கத்தில் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கும் ஃப்ரீ-ஸ்டாண்டிங் யூனிட் ஆனது தனி யூனிட்டாக உள்ளது. முன் இருக்கை பயணிக்கான பொழுதுப்போக்கு திரையினால் ஓட்டுனரின் கவனம் சிதறாதா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் காரின் கேபின் இப்படிதான் இருக்கும்

அதற்காக தான் விஷுவல் ஷீல்டு ஃபங்சன் அந்த திரைக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஃபங்சன் ஆனது கேமிராக்களின் உதவியுடன் ஓட்டுனரை தொடர்ந்து கண்காணிக்கும். கார் இயங்கி கொண்டிருக்கும்போது ஓட்டுனர் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் முன் இருக்கை பயணிக்கான பொழுதுப்போக்கு திரையை பார்த்தால், திரையில் ஓடும் காட்சிகளை ஓட்டுனர் காண முடியாத வகையில் மறைத்து கொள்ளும். இந்த செயலை கார் தன்னிச்சையாக செய்யும் என்கிறது மெர்சிடிஸ்.

எலக்ட்ரானிக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய இ-கிளாஸ் காரில் ஹார்ட்வேர் பாகங்களை குறைத்து, சாஃப்ட்வேர் மூலமாக செயல்படும் பாகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, காரில் வழங்கப்படும் இசியூ எனப்படும் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்ஸ் மற்றும் கணினிகளின் எண்ணிக்கை குறைப்பட்டுள்ளது. காரின் சாஃப்ட்வேர்கள் அனைத்தையும் செயல்படுத்த ஒரே சிங்கிள் பிராசெஸ்ஸர் புதிய இ-கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் காரின் கேபின் இப்படிதான் இருக்கும்

இவற்றுடன் 5ஜி இணைய வசதியையும் புதிய இ-கிளாஸ் கார் பெற்றுவர உள்ளது. டபிள்யூ214 என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த லக்சரி எலக்ட்ரிக் காரின் கேபினை குரல் வாயிலாகவும் கட்டுப்படுத்தலாம். அதேநேரம், இதற்காக வழக்கமான 'ஹே மெர்சிடிஸ்' வார்த்தைகளை பயன்படுத்த தேவை இருக்காது எனவும் கூறப்படுகிறது.

புதிய இ-கிளாஸின் கேபினில் பர்ம்ஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆக்டிவ் கேபின் லைட் ஸ்ட்ரிப்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. புதிய எம்பக்ஸ் சிஸ்டம் ஆனது கற்கும் செயற்கை நுண்ணறிவை (AI) கொண்டுள்ளது. இந்த தொழிற்நுட்பமானது ஓட்டுனரின் பழக்கங்களை கற்று கொண்டு அதற்கேற்ப எம்பக்ஸ் ஸ்க்ரீன் செட்அப்பை இயக்கும். இதன் மூலமாக சாலையில் ஓட்டுனர் பார்வையை எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்கிறது மெர்சிடிஸ் நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2023, 20:01 [IST]
English summary
Mercedes revealed interior of new gen e class
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+