இவ்ளோ அழகான கருப்பு நிறத்தில் விற்பனைக்கு வரபோகுதா! இத்தன நாளா இல்ல ஆனா இனி விற்பனையில சக்கைப்போடு போடப்போகுது
எம்ஜி (MG) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக சூப்பரான கார் மாடல்களில் அஸ்டர் (Astor)-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலின் பக்கமே கார் பிரியர்களை ஈர்க்கும் முயற்சியிலேயே தற்போது எம்ஜி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.
மிக சூப்பரான சிறப்பு பதிப்பு ஒன்றையே எம்ஜி நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்த சிறப்பு பதிப்பானது அஸ்டர் பிளாக் எடிசன் (Astor Black Edition) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க செப்டம்பர் ஆறாம் தேதியான நாளைய தினமே அந்த சிறப்பு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

வழக்கமான அஸ்டர் கார் மாடலைக் காட்டிலும் இது சற்று அதிக கவர்ச்சியானதாக தென்படும். மிக முக்கியமாக இந்த காரின் கவர்ச்சி தோற்றத்திற்காக பெரும்பாலான நிறமாக கருப்பு நிறம் பயன்படத்தப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் எம்ஜி அஸ்டர் பிளாக் எடிசன் என அதற்கு பெயர் வைத்திருக்கின்றது.
எம்ஜியின் மற்றுமொரு பிரபல கார் மாடலான குளோஸ்டர் பிளாக்ஸ்டார் (Gloster Blockbuster)-ம் எடிசனை தழுவியே புதிய அஸ்டர் பிளாக் எடிசனை எம்ஜி வடிவமைப்பு செய்திருக்கின்றது. இந்த குளோஸ்டர் பிளாக் ஸ்டார்ம் எடிசனை அந்நிறுவனம் நடப்பாண்டு மே மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிய அஸ்டர் பிளாக் எடிசனின் வருகை ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிசன் மற்றும் கியா செல்டோஸ் எக்ஸ்லைன் மற்றும் ஸ்கோடா குஷாக் மேட் எடிசன் ஆகியவற்றிற்கே போட்டியாக அமைய இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை பெரும் எதிர்பார்ப்பை தற்போது ஏற்படுத்தி இருக்கின்றது. அஸ்டரின் உயர்நிலை தேர்வான சேவி ட்ரிம்மை தழுவியே பிளாக் எடிசன் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
சேவி என்பது அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஓர் ட்ரிம் ஆகும். இதையே தற்போது அதிக அழாகன காராக பிளாக் எடிசன் எனும் பெயரில் அது உருவாக்கி இருக்கின்றது. ஸ்டாரி பிளாக் எனும் நிறத்தைக் கொண்டே அஸ்டர் பிளாக் எடிசனின் வெளிப்புறத்தை எம்ஜி அலங்கரித்து இருக்கின்றது.
இதுதவிர குரோம் பூச்சுக் கொண்ட அலங்காரப் பொருட்களை இந்த காரில் எம்ஜி பயன்படுத்தி இருக்கின்றது. இதனாலேயே இந்த கார் மிகவும் அழகானதாக மாறி இருக்கின்றது. குறிப்பாக வீல் மற்றும் முன் பக்க கிரில்லில்கூட கருப்பு நிறத்தை எம்ஜி பயன்படத்தி இருப்பது கூடுதல் அழகை அந்த காருக்கு சேர்த்திருக்கின்றது.
இதுதவிர, ரெட் அக்செண்டுகளும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிற அலங்கார செயல்பாடுகளினாலேயே வழக்கமான அஸ்டரில் இருந்து இந்த சிறப்பு பதிப்பு வேறுபட்டுக் காட்சியளிக்கின்றது. வேற்றுமையில் ஒற்றுமையாக இதன் வடிவமைப்பு இருக்கின்றது. ஆமாங்க, அஸ்டரின் உருவத்தில் வேறு எந்த மாற்றத்தையும் எம்ஜி செய்யவில்லை.
இதேபோல், எஞ்ஜின் விஷயத்திலும் சிறப்பு பதிப்பு மற்றும் வழக்கமான பதிப்பு இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதேவேளையில், இதன் உட்பகுதியிலும் சில சிறப்பு மாற்றங்களை எம்ஜி செய்திருக்கின்றது. அந்த வகையில் வெளிப்புறத்திற்கு ஏற்ப உட்புறத்தையும் கருப்பு நிறத்தால் எம்ஜி அலங்கரித்து இருக்கின்றது.
இருக்கை தொடங்கி, காரின் சீலிங் வரை என அனைத்திலும் கருப்பு நிறத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. ஏன் ஸ்டியரிங் வீல்கூட கருப்பு நிறத்திலேயே அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிவப்பு நிறமும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறமும் அதிக அழகானதாகக் காட்சியளிக்கின்றது.
இதைத்தொடர்ந்து, 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் எளெக்ட்ரிகல்லி அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களை வழக்கமான அஸ்டர் காரிலும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், வழக்கமான பதிப்பு மற்றும் சிறப்பு பதிப்பு ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமாக வெளிப்புற அலங்காரம் மட்டுமே இருக்கின்றது. இந்த காரில் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 138 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது
மேலும், ஒரு லிட்டருக்கு இந்த எஞ்ஜின் 14 கிமீ வரை மைலேஜ் தரும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த காரின் விலை நாளையே அறிவிக்கப்பட இருக்கின்றது. வழக்கமான வேரியண்டில் இருந்து ரூ. 50 ஆயிரம் அதிக விலையை இதுக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விழாக்காலத்தை முன்னிட்டு எம்ஜி நிறுவனம் அஸ்டர் பிளாக் எடிசனை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் இதேபோல் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கியது. இதைத்தொடர்ந்தே, எம்ஜி-யும் அதன் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதுபோலவே இன்னும் சில நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளை சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படகின்றது.


Click it and Unblock the Notifications








