இந்த புதிய எம்ஜி காருடன் இந்த தீபாவளியை ஜமாய்ச்சுடலாம்!! அஸ்டரில் புதிய லிமிடெட் எடிசன்- விலை எவ்வளவு தெரியுமா
எம்ஜி அஸ்டர் (MG Astor) காரில் பிளாக்ஸ்டோர்ம் (Blackstorm) என்ற பெயரில் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் காரின் விலை, முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
அடாஸ் உள்ளிட்ட அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்களின் தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருவதை உணர்ந்து எம்ஜி மோட்டார் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய எஸ்யூவி கார் அஸ்டர் ஆகும். நிலை-2 அடாஸ் தொகுப்பு உடன் விற்பனை செய்யப்படும் இது இணைய வசதியை கொண்ட காராக விளங்குகிறது.

இத்தகைய கனெக்டட் காரில் தான் தற்போது புதியதாக லிமிடெட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய எம்ஜி அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14,47,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிமிடெட் எடிசன் என்பதால், புதிய அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் காரை குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே வாங்க முடியும். அதாவது, இந்த ஸ்பெஷல் எடிசன் கார் சில காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.
எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் வழக்கமான ஸ்மார்ட் வேரியண்ட்டின் அடிப்படையில் புதிய பிளாக்ஸ்டோர்ம் லிமிடெட் எடிசன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அஸ்டரின் ஸ்மார்ட் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. அதேபோன்று, புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்கும்.

ரூ.14,47,800 என்பது மேனுவல் தேர்வில் இந்த புதிய லிமிடெட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதுவே, ஆட்டோமேட்டிக் தேர்வில் ரூ.15,76,800 ஆகும். வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ள புதிய அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் பெயருக்கேற்ப முற்றிலுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அஸ்டரின் வழக்கமான தோற்றத்தில் இருந்து வேறுப்படுத்தும் வகையில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இவ்வளவு ஏன், புதியதாக சில தொழிற்நுட்ப அம்சங்கள் கூட இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டு உள்ளன. காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் தேன்கூடு டிசைனிலான கிரில் மற்றும் அலாய் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் உள்ளன.
அலாய் சக்கரங்களில் வழங்கப்படும் பிரேக் காலிபர்கள் காரில் இருந்து தனித்து தெரியும் வகையில் சிவப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளன. அதேநேரம், ஹெட்லைட்கள் மற்றும் மேற்கூரையில் பொருத்தப்படும் கம்பிகள் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளன. கதவுகளின் வெளிப்பக்கத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் கார்னிஷ் வழங்கப்பட்டுள்ளது.

காரின் உட்பக்கம் டாக்ஸேடோ கருப்பு நிறத்தில் சிவப்பு நிற தையல்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிவப்பு நிறத்தை டேஸ்போர்டின் இரு பக்கங்களிலும் வழங்கப்படும் ஏசி வெண்ட்ஸ், ஸ்டேரிங் சக்கரம் மற்றும் சீட் பெல்ட் பக்கிள்களில் பார்க்க முடிகிறது. 'BLACKSTORM' முத்திரையை காரின் முன்பக்க ஃபெண்டர்கள் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர் சிஸ்டத்தின் மீது பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்க கார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. அதன்படி, எம்ஜி மோட்டார் நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையே அஸ்டரின் புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசன் ஆகும். இதன் மூலம் எம்ஜி அஸ்டர் காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









