தி-நகர், மவுண்ட்ரோடு போன்ற நெரிசல் மிகுந்த சாலைக்கு ஏற்ற மின்சார கார்... அடுத்த மாசம் அறிமுகம் செய்ய போறாங்க!

எம்ஜி கோமெட் இவி இந்தியாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா டியாகோ இவிக்கு போட்டி என கருதப்படும் இந்த கார் விரைவிலேயே அறிமுகமாக இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்திய மின் வாகன சந்தையை அதகளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டிக் கொண்டிருக்கும் கார் மாடலாக எம்ஜி நிறுவனத்தின் கோமெட் (MG Comet EV) இருக்கின்றது. இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை கடந்த சில தினங்களுக்கு முன்னரே எம்ஜி உறுதிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் எந்த மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றோம் என்கிற தகவலையும் நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்ஜி கோமெட்

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், எம்ஜி கோமெட் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆகையால், அடுத்த மாதமே இந்த காரை இந்தியாவில் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் இந்த காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தியபோது, எப்படியும் அதை விற்பனைக்குக் கொண்டு வர இன்னும் சில மாதங்கள் அல்லது இந்த வருடத்தின் இறுதி வரை எடுத்துக் கொள்ளும் என கூறப்பட்டது.

ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்து உள்ளன. எம்ஜி கோமெட் ஓர் இரட்டை கதவுகளை மட்டுமே கொண்ட சிறிய ரக எலெக்ட்ரிக் காராகும். இதன் இந்திய வருகையையே எம்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் சில முக்கிய தகவல்களும் இந்த கார் குறித்து தற்போது வெளியாகி இருக்கின்றன.

எம்ஜி கோமெட்

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் எம்ஜி கோமெட் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வெள்ளை (White), நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow) மற்றும் இளஞ்-சிவப்பு (Pink) ஆகிய நிற தேர்வுகளிலேயே எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

சிறப்பு வசதிகளிலும் இந்த கார் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. கொமெட் மின்சார காரின் உட்பக்கத்தில் உடனடியாக காரை குளிர்விக்கும் திறன் கொண்ட ஏசி வெண்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வெண்ட் பிரத்யேகமாக மைய கன்சோல் இருக்கும் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

எம்ஜி கோமெட்

இந்த ஏசியைக் கன்ட்ரோல் செய்வதற்காக ரோடரி க்னாப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பெரிய ஒற்றை துண்டு திரை, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கார் வெளியீட்டு நிகழ்வின்போதே இது பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்ஜி நிறுவனத்தின் இந்த மின்சார கார் உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எம்ஜி கோமெட்

அந்தவகையில், உல்லிங் ஏர் இவி எனும் பெயரில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 17.3 kWh மற்றும் 26.7 kWh ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன. இத்தகைய பேட்டரி பேக் தேர்விலேயே இந்தியாவிலும் கோமெட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

17.3 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், 26.7 kWh பேட்டரி பேக்கில் ஓர் ஃபுல் சார்ஜில் 300க்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் காராகவே கோமெட் விரைவில் இந்திய மின் வாகன சந்தையை களம் காண இருக்கின்றது.

எம்ஜி கோமெட்

இந்த வாகனத்தை மிகவும் குட்டியான தோற்றத்தில் எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இந்தியாவின் நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு வடிவமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால், மிக மிக குறுகிய சாலைகளுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக கொமெட் இருக்கப் போகின்றது.

இதேபோல் இதன் விலையும் அடக்கமானதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் இந்திய வருகை டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இசி3 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 14:20 [IST]
English summary
Mg comet april launch confirmed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X