வெளியானது புதிய அறிவிப்பு! இந்த எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! பைக் கம்பெனிகள் பொழப்புல மண்ணை போட்டுட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் கார், கடந்த ஏப்ரல் 26ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில், அனைவரையும் கவரக்கூடிய அதிநவீன வசதிகளுடன் (Features) இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புகைப்படங்களை பார்த்தவுடன், என்ன இந்த எலெக்ட்ரிக் கார் இவ்வளவு சிறியதாக இருக்கிறது? என நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால் இதில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை பார்த்தால் வியந்து விடுவீர்கள். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் வசதிகளை பொறுத்தவரையில், மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை போன்று டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகள் மிகவும் முக்கியமானவை.

MG Comet

இவை தலா 10.25 இன்ச் அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். மற்றொன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக இயங்கும். இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான்.

மேலும் கீலெஸ் எண்ட்ரி, பின் பகுதியில் 50:50 ஸ்பிளிட் இருக்கைகள், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எல்இடி ஹெட்லேம்ப்கள் என எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

MG Comet Electric Car

அதேபோல் செயல்திறனிலும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் அமர்க்களப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 41 பிஹெச்பி மற்றும் 110 என்எம் டார்க் ஆகும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 230 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 3.3 kW சார்ஜர் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 26ம் தேதியன்று, எம்ஜி மோட்டார் நிறுவனம் கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஒரே ஒரு வேரியண்ட்டின் விலையை (Price) மட்டுமே அறிவித்திருந்தது.

அது ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டின் விலையை எம்ஜி மோட்டார் நிறுவனம் 7.98 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இந்த வேரியண்ட்டின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களின் பெயர் மற்றும் விலை இன்று (மே 5) அறிவிக்கப்பட்டது.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அவை பேஸ் (Pace), ப்ளே (Play) மற்றும் ப்ளஷ் (Plush) ஆகும். இதில், பேஸ்தான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதன் விலைதான் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ப்ளே வேரியண்ட்டின் விலை 9.28 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் ப்ளஷ் வேரியண்ட்டின் விலை 9.98 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முதலில் முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

அதற்கு பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் மே 15ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் மே 22ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்காத விலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் எனவும், டாப் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் எனவும்தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், மிகவும் குறைவான விலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள், ரேஞ்ச் ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இது உண்மையிலேயே குறைவான விலைதான். எனவே போட்டியாளர்களான டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 5, 2023, 13:43 [IST]
English summary
Mg comet ev all variants price announced range features bookings delivery full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+