இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை பார்க்க ஷோரூம்ல கூட்டம் குவியபோகுது.. வாசல்லையே கெத்தா நிக்க வச்சிருக்காங்க!

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதகளப்படுத்தும் வகையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலே கோமெட் இவி ஆகும். இந்த காரை ஸ்கூட்டர்களைபோல மிக சுலபமாக இயக்கிக் கொள்ள முடியும். இதன் உருவம்கூட மிகவும் எளிமையானது மற்றும் சிறியதாகவும் உள்ளது.

ஆகையால், இதை பார்க் செய்ய பெரிய அளவில் இட வசதி தேவைப்படாது. ஓர் ஆட்டோவை நிறுத்துவதற்கு தேவைப்படும் இடமே போதுமானது. இத்தகைய குட்டி காராகவே எம்ஜி கோமெட் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் சமீபத்திலேயே நாட்டில் தொடங்கின.

Mg comet ev dealer dispatch starts

இந்த நிலையிலேயே ரைடு எக்ஸ்பீரியன்ஸை பெற்றுக் கொள்வதற்காக எம்ஜி கோமெட் கார் விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக எம்ஜி கோமெட் இவி கார் எம்ஜி விற்பனையகங்களில் கெத்தாக நின்றுக் கொண்டிருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

மேலும், பலர் கோமெட் இவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வீடியோவையும் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், காரை ஓட்டி பார்த்தவர்கள் சிலர் இந்த கார் மிகவும் சுலபமான இயக்க அனுபவத்தை தங்களுக்கு வழங்கியதாகவும், டூ-வீலரைபோல் மிகவும் சுலபமாக காரை ஓட்ட முடிந்ததாகும் கூறியுள்ளனர்.

Mg comet reaches showroom

எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை டைர் 2 மற்றும் டைர் 3 ரக நகரங்களிலும் விற்பனைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கின்றது. விலை கம்மியா இருக்கு, பார்க்கவும் குட்டியா இருக்கேனு இந்த காரை லேசா எடைப் போட்றாதீங்க. அதிக உறுதியானதாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாகவும் கோமெட் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் கோமெட் இவி காரை ஜிஎஸ்இவி பிளாட்பாரத்தை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனை அதிக உறுதியான ஸ்டீலைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. அதேவேளையில், கவர்ச்சியான ஸ்டைலைக் கொண்டதாகவும் கோமெட் காட்சியளிக்கின்றது. முழுமையாக மூடப்பட்ட க்ரில், மெல்லிய ரக ஹெட்லேம்ப், முழு எல்இடி லைட் மற்றும் அழகிய பம்பர்கள் என பல்வேறு அலங்காரப் பொருட்கள் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Mg comet ev side view

10.25 அங்குல திரைகள் இரண்டு இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒன்று தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் செயல்படும். இத்துடன், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமிரா, டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் எம்ஜி கோமெட் இவி-ல் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அறிமுகமாக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு 7.98 லட்சம் தொடங்கி ரூ. 9.98 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை எம்ஜி விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதற்கு பின்னர் உடனடியாக விலை உயர்த்தப்பட இருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்ஜி கோமெட் மிக சிறியதாக இருந்தாலும் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. ஆனால், கொழு கொழுவென இருப்பவர்கள் என்றால் முன் பக்கத்தில் டிரைவருடன் சேர்த்து இருவரும், பின் பக்கத்தில் இருவரும் என நான்கு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். பேஸ் (Pace), பிளே (Play) மற்றும் பிளஷ் (Plush) ஆகியவையே அவை ஆகும். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் 17.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக் இதுவாகும். மின் மோட்டாரை பொருத்த வரை 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இந்திய சந்தையில் டாடா டியாகோ இவிக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிறப்பம்சம், விலை என அனைத்தையும் எம்ஜி நிர்ணயம் செய்திருக்கின்றது. ஆகையால், டியாகோவை விற்பனையில் விரைவில் கோமெட் இவி வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 15:09 [IST]
English summary
Mg comet ev arrives dealer showroom here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X