அப்பளமா நொருங்கிடும்னு நினைச்சோம்! ஆனா சும்மா கல்லு மாதிரி நின்ற எம்ஜி கோமெட் இவி! வைரலாகும் வீடியோ
எம் ஜி நிறுவனத்தின்கோமெட் இவி கார் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இரு கார்களும் பலத்த சேதம் அடைந்த நிலையில் காரில் இருந்த பயணிகள் சிறு கீரல் கூட இல்லாமல் உயிர் தப்பி உள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியா முழுவதும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. டாடா நிறுவனத்தின் நானோ காரை போல இந்த கார் பிரபலம் அடையும் என பலர் பேசினார்கள். இந்த காரை ஏகப்பட்ட பேர் புக் செய்தார்கள்.

இப்படியாக புக்கிங் செய்தவர்களுக்கு வரிசையாக கார் டெலிவரி துவங்கியுள்ளது. பல கார்களை வாங்கி சாலைகளில் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த எம்ஜி கோமெட் டிவி கார் விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ எம்ஜி கோமெட் இவி கார் விபத்து நிகழும் போது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை. ஆனால் விபத்து ஏற்பட்ட பின்பு எடுக்கப்பட்ட வீடியோ இந்த வீடியோவின் படி எம்ஜி கோமெட் இவி காரும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியூ கார் ஒரு சாலை சந்திப்பில் மோதிக்கொண்டன எம் ஜி கோமெட் இவி கார் அதிக வேகமாக வந்து கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் பக்கவாட்டில் மோதி உள்ளது.

இந்த விபத்தில் இரண்டு கார்களுக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு காருக்குள் இருந்த பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சிறு கீறல் கூட ஏற்படாமல் தப்பிவிட்டனர்.இந்த விபத்தின் போது எம்ஜி கோமெட் இவி காரின் முன் பக்கம் மோதியதால் அதன் ஏர் பேக்குகள் சிறப்பாக வேலை செய்துள்ளது. இதன் காரணமாக முன் சீட்டிலிருந்த இரண்டு பயணிகளும் எந்த காயமும் இல்லாமல் பத்திரமாக காரிலிருந்து வெளியேற்றினர்.
இந்த எம் ஜி கோமெட் இவி கார் அதிக பலம் கொண்ட வெஹிகில் பாடி கொண்வு உருவாக்கப்பட்டுள்ளது.17 ஹாட் ஸ்டேபிங் பேனல்கள் இருக்கிறது. இது காரின் பாடியை பாதிக்காத அளவு பாதுகாப்பு வழங்குகிறது. அதனால் இந்த கார் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக தான் இருக்கிறது.
இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் 39 விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதன்படி டூயல் பிரிண்ட் ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சீட் பெல்ட், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார், டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம், ஐஎஸ்ஓ சைல்டு சீட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த எம்ஜி கோமெட் இவி காரின் அளவுகளை பொறுத்த வரை 2974 மிமீ நீளமும் 1505மிமீ அகலமும் 1631மிமீ உயரமும் 2010மிமீ வீல் பேஸூம் இருக்கிறது. இந்த காரில் அதிக இட வசதி கொண்ட கேபின் இருக்கிறது. இதன் உள்ளே 10.2 இன்ச் அளவில் 2 டிஜிட்டல் டிஸ்ப்ளே இருக்கிறது. அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் மற்றொன்று டிரைவர் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டராகவும் செயல்படுகிறது.
இது போக இந்த காரில் இரண்டு ஸ்போக்-9 டச் ஸ்டேரிங் வீல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்பரேட் கொண்ட இன்ஃபோடைமென்ட் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் கீ, பவர் விண்டோ, கிரே தீம் உட்புற கட்டமைப்பு, லெதர் பொருத்தப்பட்ட ஸ்டேரிங் வில் ஆகியன உள்ளன.
இந்த கார் தான் இந்தியாவிலேயே சிறிய காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் எலெக்ட்ரிக் கார் என்பதால் இதன் பேட்டரிக்காக வீல் பேஸ் பெருசாக வழங்கப்பட்டுள்ளது. பாக்ஸ வடிவமைப்பில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இரண்டு டோன் ஃபினிஷ் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
இந்த காரின் பேட்டரி பேக்கை பொறுத்தவரை 17.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 7 மணி நேரத்தில் 0 முதல் 100% வரையிலான சார்ஜை ஹோம் சாக்கெட் மூலம் ஏற்றுக் கொள்ளும். இதற்காக 3.3 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காருக்கு பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடையாது இந்த கார் முழு சார்ஜில் 230 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் 42 பிஎஸ் பவரையும் 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் சிறிய கார் என்பதால் இந்த கார் விபத்தில் சிக்கினால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கருதி வருகின்றனர். ஆனால் எம்ஜி நிறுவனம் இந்த காரை சிறந்த பாடி பில்டுடன் தயாரித்துள்ளது .இதனால் விபத்தில் மற்ற கார்களை போல இந்த கார்களிலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும் அதற்கு இந்த விபத்தே சாட்சி.


Click it and Unblock the Notifications








