MG Comet EV நாளை அறிமுகமாகிறது.. டாடா டியாகோ இவியோட நிலைமையை நினைச்சாதான் கவலையா இருக்கு!
இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் நாளைய தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதுபற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி, இந்திய சந்தையில் நாளைய தினம் (ஏப்ரல் 19) கோமெட் இவி எனும் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலான டியாகோ இவி-க்கு போட்டியாகவே அது விற்பனைக்குக் கொண்டு வருகின்றது.

வெளியீட்டு தினமான நாளைய நாளிலேயே எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்ஜி கோமெட் இவி ஓர் இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட குட்டியான ஹேட்ச்பேக் ரக மின்சார காராகும். இந்த காரில் டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
நகர்புறத்தின் நெருக்கமான சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக கோமெட் இவி இருக்க வேண்டும் என்பதால் இத்தகைய வடிவமைப்பு எம்ஜி அதற்கு வழங்கி இருக்கின்றது. விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய எளிமையான தோற்றம் கோமெட் இவிக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த காரில் பிரீமியம் தர அம்சங்கள் சற்றும் குறைவில்லாமல் காட்சியளிக்கின்றன.

10.25 அங்குல திரை இரண்டும், டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மென்ட் கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், ரோடரி டயல்கள் கொண்ட மேனுவல் ஏசி என எக்கசக்க சிறப்பு வசதிகள் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரு திரைகளில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், மிக சூப்பரான அமைப்பு கொண்ட இருக்கையையே இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது. இதுதவிர இன்டர்நெட் இணைப்பு வசதி, மல்டி மீடியா மற்றும் பிற கன்னெக்ட் அம்சங்கள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் கோமெட் இவி-யில் வழங்கப்பட்டிருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை கோமெட் இவி-யில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கோமெட் இவி இரு விதமான பேட்டரி பேக்குகளில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இப்போது வரை நிறுவனம் ஒற்றை பேட்டரி பேக்கை மட்டுமே உறுதிப்படுத்தி இருக்கின்றது. அது ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், கோமெட் இவி-யில் 300 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கும் விற்பனைக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரையே எம்ஜி நிறுவனம் நாளைய தினம் இந்திய சந்தையில் முதல் முறையாக வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, டாடா டியாகோ இவிக்கு போட்டியாக இது விற்பனைக்கு வர இருப்பதால் இதன் விலை எவ்வளவு இருக்கும் என்பதே பலரின் சிந்தனையாக இருக்கின்றது. இவை அனைத்திற்கும் வெகு விரைவில் முற்று புள்ளி வைக்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி இருக்கும். நிறுவனம் இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை சற்று அதிகம். இந்த நிலையிலேயே கோமெட் இவி-யை அது களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு ரூ. 10 - ரூ. 13 லட்சம் வரையில் விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








