மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது! எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
முன்னதாக எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என்ற எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே (Price) 23.38 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 27.40 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.98 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 9.98 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.
மிகவும் விலை குறைவான தயாரிப்பாக இருந்தாலும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி மற்றும் ஐ-ஸ்மார்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன வசதிகளும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 17.3 kWh பேட்டரி (Battery) கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான ரேஞ்ச்-ஆக (Range) கருதப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
எனவே இனி எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை நம்மால் சாலைகளில் பார்க்க முடியும். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில், டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும்.
இந்திய சந்தையில் சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. குறைவான விலையில் வந்துள்ளதால், இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் கடும் சவால் காத்திருக்கிறது என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம் (ரிவியூ செய்தியை நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்). எங்களை போலவே, பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்களையும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் கவரும் என்பதே எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications








